விதிகளை மீறும் பாக்கெட் உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 1 Second

இந்தியாவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் துரித உணவுகளில் உள்ள உப்பு மற்றும் கொழுப்பு உள்ளடக்கங்களின் அளவு பாதுகாப்பு வரம்புகளை மீறியுள்ளது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (Centre for Science and Environment-CSE) ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நகரங்களில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் துரித உணவு நிலையங்களில் இருந்து சிப்ஸ் 14 மாதிரிகள், உப்பினால் செய்யப்பட்ட தின்பண்டங்கள், உடனடியாக செய்து சாப்பிடும் நூடுல்ஸ், சூப் மற்றும் பர்கர் 19 மாதிரிகள், பொரித்த, வறுத்த கோழி, பீட்சாக்கள், சாண்ட்விச்கள், Wraps போன்ற 33 வகையான ஜங்க் உணவுகள்(Junk foods) சேகரிக்கப்பட்டு அதிலுள்ள உப்பு, கொழுப்பு, Trans-fat மற்றும் கார்போஹைட்ரேட் அளவுகள் பரிசோதிக்கப்பட்டது.

ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட உணவுகள் எவ்வளவு பாதுகாப்பற்றவை என்பதைக் கணக்கிட Recommended Dietary Allowance (RDA) என்கிற கருத்து அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த RDA விஞ்ஞான ரீதியிலான ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்தக் கருத்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்தியாவில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் போன்ற நிபுணத்துவம் பெற்ற அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வயது வந்தோர்(Adults) ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு, 60 கிராம் கொழுப்பு, 300 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 2.2 கிராம் Transfat என்கிற இந்த அளவுக்குமேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு காலை, மதியம் மற்றும் இரவு உணவிலிருந்தும் கிடைக்கும் RDA அளவு மேற்சொன்ன அளவுகளில் 25 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. மேலும் தின்பண்டங்களிலிருந்து கிடைக்கும் RDA அளவு 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படைக் கருத்து. ஆனால், சந்தையில் விற்பனையாகும் பேக்கிங் செய்யப்பட்ட 100 கிராம் அளவுள்ள நட்ஸ், சூப் அல்லது நூடுல்ஸ் ஆகியவற்றில் CSE பரிந்துரை செய்துள்ள அளவுகளைவிட அதிகமான அளவு உப்பும், கொழுப்பும் இருக்கிறது.

உதாரணமாக 231 கிராம் அளவுள்ள பிரபல நிறுவனம் ஒன்றின் Aloo Bhujia சிற்றுண்டியில் 7 கிராம் உப்பும், நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்புகள் (saturated and unsaturated) மொத்தம் 99 கிராம் அளவும் இருக்கிறது. 70 கிராம் அளவுள்ள நூடுல்ஸ் மசாலா
சிற்றுண்டியில் பரிந்துரைக்கப்பட்ட RDA அளவு 50 சதவீதம் அதிகமாக உள்ளது. இதேபோல Nut cracker சிற்றுண்டியில் உப்பு 35 சதவீதமும், கொழுப்பு 26 சதவீதமும் அதிகமாக இருக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பல Junk food-களிள் உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகள் RDA-வால் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே உள்ளது. அனைத்து வகை சிப்ஸ்களிலும் உப்பின் அளவு குறைந்தபட்சம் 2.4 மடங்கு முதல் அதிகபட்சம் 5.1 மடங்கு வரை அதிகமாக உள்ளது.

மேலும் கொழுப்பின் அளவு குறைந்தபட்சம் 2.1 மடங்கு முதல் அதிகபட்சம் 4.6 மடங்கு வரை அதிகமாக உள்ளது. இதேபோல் இன்னோர் பிராண்ட் சிற்றுண்டிகளில் உப்பின் அளவு குறைந்தபட்சம் 2.7 மடங்கு முதல் அதிகபட்சம் 7.9 மடங்கு வரை அதிகமாக உள்ளது. கொழுப்பின் அளவு குறைந்தபட்சம் 4.3 மடங்கு முதல் அதிகபட்சம் 5.6 மடங்கு வரை அதிகமாக உள்ளது. பல வகை நூடுல்ஸ்களில் உப்பின் அளவு குறைந்தபட்சம் 5.8 மடங்கு முதல் அதிகபட்சம் 6.7 மடங்கு வரை அதிகமாக உள்ளது. கொழுப்பின் அளவு குறைந்தபட்சம் 1.9 மடங்கு முதல் அதிகபட்சம் 2.8 மடங்கு வரை அதிகமாக உள்ளது என்கிறது CSE-யின் ஆய்வு.

2015-ம் ஆண்டு முதல் சமீபத்தில் ஜூலை மாதம் வரை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள்-லேபிளிங் மற்றும் டிஸ்ப்ளே (Food Safety and Standards-Labelling and Display) குறித்து பல விவாதங்கள் நடைபெற்று பல வரைவுகள் வெளிவந்துள்ளது. இந்த வரைவுகள் இன்னும் சட்டமாகவில்லை. இந்த வரைவுகளை உள்ளடக்கிய உணவு பாதுகாப்புக்கான சட்டத்தை இயற்றி விரைவில் செயல்படுத்த வேண்டும். இதுவரை முன்மொழியப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி பாக்கெட் உணவுப் பொருட்களை தயார் செய்யும் நிறுவனங்கள் அந்த பாக்கெட்டின் மீதுள்ள லேபிளில், அந்த பாக்கெட்டில் உள்ள உணவில் உள்ள கலோரிகள், நிறைவுற்ற கொழுப்பு, Transfat, சர்க்கரை மற்றும் சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் அளவுகள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த லேபிளில் CSE பரிந்துரை செய்துள்ள RDA அளவுகளையும் தெரியப்படுத்த வேண்டும்.

சிலி மற்றும் பெரு நாட்டில் பிரபலமாக உள்ள தின்பண்டங்கள் மற்றும் துரித உணவுகளின் பாக்கெட்டுகளின் மீது CSE-யின் வரைவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவுகளின் அடிப்படையில், அதற்கான எச்சரிக்கை சின்னமாக Red Octagon-ஐப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு
செய்துள்ளனர். உணவுப்பொருள் உள்ள பாக்கெட்டின் முன்புறத்தில் அச்சிடப்பட வேண்டிய இந்த சிவப்புநிற Octagon ஆனது அந்த உணவுப் பொருளில் உப்பு, கொழுப்பு உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் RDA பரிந்துரையைவிட எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கும் விதமாக எண் வடிவம் மற்றும் சேர்மானப் பொருட்களின் பெயர்களாகவும் இடம்பெற்றிருக்கும். அதாவது இந்தியாவின் பிரபலமான ஒரு பாக்கெட் உணவின் மீது ஒரு Red Octagon உடன் 3.1 உப்பு என்றிருந்தால், அதில் RDA பரிந்துரையைக் காட்டிலும் உப்பு 3.1 மடங்கு அதிகமாக உள்ளதைக் குறிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேகம் பளபளப்பிற்கு சீரகம்!! (மருத்துவம்)
Next post உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே! (மகளிர் பக்கம்)