அழகாய் இருக்கிறாய்… பயமாய் இருக்கிறது…!! ( மருத்துவம்)

Read Time:3 Minute, 34 Second

பிரிக்க முடியாதது அழகும் ஆபத்தும் என்று எந்த அர்த்தத்தில் சொன்னார்களோ தெரியாது. ஆனால், அழகு தரும் சாதனங்கள் பலவற்றிலும் ஆபத்துகள் மறைமுகமாக இருக்கிறது என்றே மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக Journal of applied microbiology-ல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மஸ்காரா, ஐ-லைனர், லிப்கிளாஸ் போன்ற பெரும்பாலான அழகுசாதனப் பொருட்கள E-Coli, Staphylococci உள்ளிட்ட பாக்டீரியாக்களால் மாசுபட்டிருக்கலாம். அவற்றில் பெரும்பாலானவை சுத்தம் செய்யப்படவில்லையென்றும், அவற்றின் காலாவதி தேதிகளுக்கு அப்பாலும் பயன்படுத்தப்படுகின்றன என்று் தெரிவிக்கிறது இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி.

மேலும் நோயெதிர்ப்பு பலவீனமாக உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து மேலும் அதிகமாகக்கூடும். அழகு கலவைகளை தவறாமல் கழுவி அவற்றை நன்கு உலர வைப்பதன் அவசியத்தைப் பற்றி நுகர்வோர் மற்றும் ஒப்பனைத் தொழிலில் இருப்பவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய தேவை இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக அழகு சாதனப்பொருட்களின், பேக்கேஜிங்கில் காலாவதி தேதிகள் மற்றும் சுத்தம் செய்யும் வழிமுறைகள் அச்சிடப்பட வேண்டிய கட்டாயம் தற்போது வரை வரையறுக்கப்படவில்லை. ஃபவுண்டேஷன், லிப் கிளாஸ் போன்றவற்றை பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ஜுகள், ப்ரஷ்கள் எப்போதுமே சுத்தம் செய்யப்படாமல் 93 சதவீத பாக்டீரியாக்கள் இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மேலும் இதை நுகர்வோரும் சுத்தமாக பயன்படுத்துவதில்லை. அவை கீழே விழும்போதும் உபயோகத்திற்குப்பின், உள்ளே வைக்கப்படும்போதும், மாசடைந்து நோய்க்கிருமிகள் உற்பத்தியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதெல்லாம் ஏதோ சாதாரண தயாரிப்புகளில்தான் இருக்கும் என்று எண்ண வேண்டாம். பாக்டீரியா தொற்றுக்கு சிறிய நிறுவனம், பெரிய நிறுவனத் தயாரிப்பு என்று எந்த விதிவிலக்கும் இல்லை. முக்கியமாக நுகர்வோர் இதைப் பற்றியெல்லாம் அறியாமலேயே வாங்குவது கூடாது என்பதையும், உற்பத்தியாளர்கள் காலாவதி தேதிகள் மற்றும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகளை பேக்கிங்கில் தெளிவாக போடவேண்டும் என்பதையும் இந்த ஆய்வு வலியுறுத்தியுறுக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி, போலீஸ் டெக்னாலஜிகள் இவைதான் !! (வீடியோ)
Next post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! (அவ்வப்போது கிளாமர்)