முகப்பருவை போக்கும் மருத்துவம்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 45 Second

அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்க்கலாம். அந்தவகையில், முகப்பருவை போக்குவது குறித்து நலம் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பருவால் முகத்தில் கருமை நிறம், சிறிய பள்ளம் ஏற்படும். வியர்வை நாளங்களில் அடைப்பு, எண்ணெய் சுரப்பிகள் அடைபடுவது, அதிகளவில் இனிப்பு சாப்பிடுவது, மலச்சிக்கல், வியர்வை தடைபடுவது போன்றவற்றால் முகப்பரு ஏற்படும்.

முகப்பரு பிரச்னைகளுக்கு கற்பூரவல்லி, திருநீற்று பச்சை, வெள்ளை சாரணை, எலுமிச்சை ஆகியவை மருந்தாகிறது. திருநீற்று பச்சை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இதன் சாறு ஒரு சொட்டு விடுவதால் காது வலி சரியாகும். முகப்பருக்கு மருந்தாக விளங்கும் கற்பூர வல்லி, ஓமத்தின் மணத்தை உடையது. சளியை வெளியேற்றும் தன்மை கொண்டது. வெள்ளை சாரணை முகப்பருவை போக்குகிறது.

திருநீற்று பச்சையை பயன்படுத்தி முகப்பருவுக்கான மருந்து தயாரிக்கலாம். திருநீற்று பச்சை இலைகளை நீர்விடாமல் அரைத்து பிழிந்து சாறு எடுக்கவும். முகப்பரு அதிகம் இருப்பவர்கள் இந்த சாறை பூசி காலையில் முகம் கழுவினால் முகப்பரு போகும். முகப்பரு இல்லாத இடத்தில் பூசினாலும் பாதிப்பில்லை. ஒருவாரம் தொடர்ந்து பூசினால் முகப்பருக்கள் வடு இல்லாமல் மறைந்து போகும்.

திருநீற்று பச்சையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. நோய் நீக்கியாக விளங்குகிறது. பூஞ்சை காளான்களை விரட்ட கூடியது. நுண்கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நோய்களை சரிசெய்கிறது. இதன் விதைகள் சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. துளசி இனத்தை சார்ந்தது. இலைகள் தோல் நோயை போக்க கூடியது. முகப்பருவுக்கு இதன் சாறு அற்புதமான மருந்தாகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோஸ்டம் பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகப்பருவுக்கு மேல் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவவும்.

இவ்வாறு செய்துவர முகப்பரு மறையும். முகப்பருவில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். கற்பூரவல்லி இலைகளை நசுக்கி சாறு பிழிந்து சந்தன பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து பருக்களின் மீது பூசி வர முகப்பரு மறையும். முகப்பருவின் வீக்கம், வலி வற்றிப்போகும். ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அற்புதமான மூலிகை கற்பூரவல்லி. வயிற்று கோளாறுகளை போக்கும். இருமல், சளி, காய்ச்சலை சரி செய்யும்.

வெள்ளை சாரணையின் வேர் பொடி சிறிது எடுக்கவும். முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் சிறிதளவு மட்டுமே மஞ்சள் பொடி சேர்க்கவும். இதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவிவர பருக்கள் மறையும். வடு தெரியாமல் மறைந்து முகத்தில் பொலிவு, மென்மை ஏற்படும்.

வெள்ளை சாரணை நீர்பாங்கான இடங்களில் தரையோடு தரையாக இருக்கும். கொடி இனத்தை சார்ந்த இது சிறுநீர் கோளாறுகளுக்கு மருந்தாகிறது. உள்ளங்கை, கால்களில் அதிகம் வியர்வை வருவதை சரிசெய்யும் மருத்துவத்தை பார்க்கலாம். இலந்தை இலைகளை பசையாக்கி உள்ளங்கை, கால்களில் பூசிவர இப்பிரச்னை சரியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்!! (மருத்துவம்)
Next post கிராமங்களில் அதிகரிக்கும் நீரிழிவு!! (மருத்துவம்)