பத்த கோணாசனம்!! (மகளிர் பக்கம்)
தரையில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து முடிந்தவரை கால்களை மிக நெருக்கமாக கொண்டு வந்து, உங்கள் உள்ளங்கால்கள் இரண்டும் தொட முயற்சி செய்யவும். உங்கள் கால்களை இறுக்கமாக உங்கள் கைகளால் பிடிக்கவும். ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும், பின் மூச்சை விடும் போது தொடைகளை தரையோடு கீழ்நோக்கி அழுத்தவும். சாதாரணமாக மூச்சு விட்டு தொடைகளை ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பது போல மேலும் கீழும் அசைக்கவும்.
என்ன பயன்கள்
* இந்த ஆசனம் மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்தும் உதவுகிறது.
* இது ஒரு மன அழுத்தம் நிவாரணியாக செயல்படுகிறது.
* இந்த ஆசனம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
* இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.