இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 145,380!! (உலக செய்தி)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தவு வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையிலும் நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 138,845 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 1,45,380ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பில் இருந்து 60,490 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80,722 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 146 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டித்தில் 52,667 பேருக்கு கொரோனா பாதிப்பு கணிடறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1,695 பேர் பலியாகியுள்ள நிலையில், 15,786 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2 ஆவது இடத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 17,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8731 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாப் 5 மாநிலங்கள்
1) மகாராஷ்டிரம் – 52,667
2) தமிழ்நாடு – 17,082
3) குஜராத் – 14,460
4) தில்லி – 14,053
5) ராஜஸ்தான் – 7,300