மருத்துவ குணம்மிக்க செண்பகம்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 4 Second

*இயற்கையின் அதிசயம்

மனிதனின் இன்பத்திலும், துக்கத்திலும் பண்டைய காலந்தொட்டு இன்ைறய காலம் வரை மலர்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. இதற்கு மலர்களின் அழகு, மணம் மட்டுமல்லாது மருத்துவ குணங்களும் முக்கிய காரணம். அந்த வரிசையில் மிக முக்கியமானது செண்பக மலர். இது குறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவர் தீபா பகிர்ந்து கொள்ளும் சில தகவல்களை பார்ப்போம்…

பொதுவாக செண்பக மரத்தின் மலர் மட்டுமின்றி அதன் காய், விதை மற்றும் வேர், பட்டை ஆகியவை நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடிய அருமருந்தாக இயற்கை நமக்கு கொடுத்த அரும்கொடையாக மன நிலையை செம்மைப்படுத்துவதை அறிந்துதான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு மலரையும் ஒவ்வொரு நிகழ்வுக்கு என்று ஒதுக்கி பரிந்துரை செய்துள்ளனர். செண்பக மரத்தில் உள்ள அனைத்தும் நமக்கு மருத்துவ ஆற்றலை கொடுத்து, உடல் நலத்தை சீராக்குகிறது. செண்பக மரத்தின் சிறப்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் பார்ப்போம்.

செண்பக மரத்தின் சிறப்பு

செண்பக மரம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும் காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைக்க உதவுகிறது. செண்பக மரங்கள் செழிப்பான தன்மையை கொண்டுள்ளது. செண்பகத்தின் மலர்கள் இலை மற்றும் கனி பட்டைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் டிரைடெர்பினாய்ட்ஸ்(Triterpenoids), செஸ்குய்டெர்பீன்(Sesquiterpene), லிரியோடினைன்(Liriodenine) போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன. விதை, வேர் பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. மூட்டு வலி, வாதம் தசைப்பிடிப்பு, வீக்கம் ஆகிய நோயிலிருந்து விடுபட இந்த எண்ணெய் பயன்படும். செண்பக மரத்தின் மலர்கள், விதைகள் வேர்ப்பகுதி ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.

நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு நீங்க செண்பகப் பூ உதவுகிறது. செண்பகப்பூ கசப்பு சுவை உடையது. கசப்பு சுவையின் பலம் நரம்புக்கு கிடைக்கிறது. நரம்பின் பலத்தினால்தான் உடல் இயங்குகிறது. நரம்புத் தளர்ச்சி அல்லது ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள். செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும். உடலை இயக்குவதும் மனத்தை இயக்குவதும் மூளையை இயக்குவதும் நரம்புகள்தான். போதிய நரம்பு பலம் உள்ளவர்கள் சுறுசுறுப்பாகப் பல செயல்களைச் செய்கிறார்கள்.

செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்திவந்தால் நரம்புத் தளர்வு நீங்கும். பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஆகியவை உண்டாகும். செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் உணவுக்கு முன்னால் அருந்தி வந்தால் பித்த நீர் குறையும். வைரஸ், பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப்பூவை காய வைத்து கஷாயம் செய்து 50 மிலி, 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் காய்ச்சலிலிருந்து குணமடைவர். சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து தரலாம். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு வாசனை திரவியங்கள் தயாரிக்கப்பட்ட Magnolia aroma என்ற எண்ணெய் பல்வேறு சிகிச்சை முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. செண்பகப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல், தலைவலி கண்நோய்கள் குணமாகும் மேலும் இந்த எண்ணெய் கீழ்வாத வலியை போக்கும்.

செண்பகப் பூவை அரைத்து பசையாக எடுத்துக் கொண்டு நல்ல எண்ணெயுடன் சேர்த்து சூடாக்கி ஆறியதும் அதை வடிகட்டிய எண்ணெயை வலி, வீக்கம், கை கால் எரிச்சல், உடல் எரிச்சல், முழங்கால் வலி, மூட்டுவலி ஆகிய உடல்ரீதியிலான பிரச்னைகளுக்கு மசாஜ் செய்து வந்தால் நன்கு பலன் கிடைக்கும். செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமம் ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து கண்ணை மூடிக் கொண்டு கலவையை கண் இமைக்கு மேலும் கீழும் பற்றுப்போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். கண்களில் வரக்கூடிய உபாதைகள் குறிப்பாக கண்கட்டி,கண் எரிச்சல் தெளிவான பார்வை பெற செண்பகப்பூவின் பற்று உதவுகிறது.

செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் கண் சிவந்திருந்தாலோ, கண் சோர்வு ஏற்பட்டிருந்தாலோ நிவாரணம் கிடைக்கும். உலர்த்தப்பட்ட வேர், வேர்பட்டை மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் தொல்லைகளைப் போக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கனிகள் சிறுநீர் மண்டல நோய்களுக்கு உதவுகிறது. விதைகளின் எண்ணெய் வயிற்று உப்புசம் மற்றும் பாதங்களின் வெடிப்பைப் போக்கவும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்திவந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்புகளின் நண்பன்!! (மருத்துவம்)
Next post அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)