ஆப்பிரிக்க சிறுவனை, மடோனா தத்து எடுத்தார்

Read Time:1 Minute, 30 Second

Madona.jpgபிரபல பாப் இசை பாடகி மடோனா. சினிமா டைரக்டரான கெய் ரிட்சினை திருமணம் செய்துள்ள 48 வயதான மடோனாவுக்கு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் ஆப்பிரிக்க சிறுவனை தத்து எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த சிறுவனின் பெயர் டேவிட் பாண்டா. அவனுக்கு ஒரு வயதே ஆகிறது. பிரசவத்தின் போது அவனது தாய் இறந்து விட்டார். தந்தை மட்டும் இருக்கிறார்.

இந்த தத்து எடுப்பு விவரத்தை மடோனாவின் செய்தி தொடர்பாளர் கடந்த வாரம் மறுத்தார். இதற்கிடையில் அந்த சிறுவனுடன் மடோனா காட்சி தரும் படத்தை இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. இது பற்றி சிறுவனின் தந்தை யொகின் பாண்டா கூறுகையில்,“ இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. வறுமையில் இருந்து அவன் மீண்டு இருக்கிறான்” என்றார். சட்டபூர்வ தத்து எடுப்புபணி முடிந்ததும் சிறுவனை லண்டன் அல்லது அமெரிக்காவில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு மடோனா அழைத்து செல்வார் என்று தெரிகிறது.

Madona.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 2வது அணு குண்டை சோதித்ததா வ.கொரியா?
Next post “அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு ஆறரை லட்சம் இராக்கியர்கள் பலி”