ஈபிடிபி அமைப்பின் ஊடகங்களுக்கான அறிக்கை

Read Time:5 Minute, 9 Second

epdp.flag1.jpgபடு கொலை காலாச்சாரத்திற்கு எதிராக குரல் எழுப்பிய ஐனநாயகப்போராளிகள் மீதான படுகொலை என்பது மனித குலத்திற்கு எதிரான வெறி பிடித்த மனநோயாகும்! தமிழ் பேசும் மக்களின் விடுதலையின் பெயரால் புலித்தலமையால் தொடரப்படும் படுகொலை கலாச்சாரம் என்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலாகவும் அரசியலுரிமைக்கு தடையாகவும் இருந்து வருகின்றது. சொந்த இனத்தையே கருவறுக்கும் வகையில் மனித உயிர்களை பலியெடுத்து தெருவில் எறியும் கொலைக்கலாச்சாரத்திற்கு எதிரான ஐனநாயகத்தின் குரல்கள் பல தளங்களில் இருந்தும் கிளம்பி வருகின்றன!

புலிகளின் கொலை அச்சுறுத்தல்களினால் குரல் வளைகள் நசுக்கப்பட்டு நலிந்து போன எம்மக்கள் மத்தியில் துணிச்சலுடன் நின்று குரல் எழுப்பி வரும் எம் ஐனநாயகப்போராளிகள் பலரும் புலிகளின் தனித்தலமை வெறி பிடித்த பாசிசத்திற்கு பலியாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக எமது தோழர்கள் மூவர் இன்றைய தினம் 12. 10. 06 அன்று யாழ் நகரில் குருதி பருகும் புலித்தலமையின் கொலை வெறிக்கு பலியாகியுள்ளனர்.

எமது கட்சியின் யாழ் பிராந்திய பொதுசன தொடர்பாளர் தோழர் சதீஸ் என அழைக்கப்படும் ஆலாலசுந்தரம் சதீஸ்குமார் (வயது 24), தீவக அமைப்பாளர் தோழர் முகுந்தன் என அழைக்கப்படும் இராசையா விக்கினேஸ்வரன் (வயது 33), பொது சனத் தொடர்பாளர் தோழர் சுதா என அழைக்கப்படும் அருள்நாயகம் குணநாயகம் (வயது 26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மற்றும் எமது மூத்த உறுப்பினர் தோழர் காந்தன் அவர்கள் படுகாயமடைந்திருக்கின்றார்.

இதுபோன்ற படுகொலைகள் மட்டும் தான் விடுதலைப் போராட்டத்தை திசை வழி மாறி இழுத்து சென்ற பிரதான காரணி என்பதையும் இத்தகையை தனித்தலமை வெறி மட்டும்தான் இன்று வரை அர்த்தமுள்ள அரசியில் தீர்விற்கு எதிராக எழுந்து நிற்கும் பாரிய தடைக்கல் என்பதையும் புலித்தலமை இது வரை உணர்ந்ததாய் இல்லை!

உலக வரலாறெங்கும் அரங்கேறிய இது போன்ற அராஐகச்செயல்களை சம்பந்தப்பந்தப்பட்டவர்கள் தோல்விகளை சந்தித்திருந்த இறுதி அத்தியாயத்தில் கூட உணர்ந்து கொண்டதாய் இருந்ததில்லை! காரணம், ஏன் என்று கேள்வி கேட்டவர்களினதும் மக்களின் நலன் நின்று உண்மைகளை உரைப்பவர்களினதும் உயிர்களை கேள்விக்கு இடமின்றி கொன்றொழிப்பது என்பது வெறி பிடித்த ஒரு மனநோயாகும்!

இந்த உயிர்க்கொல்லி மனநோய்க்கு தகுந்த மருத்துவத்தை எங்கும் நடந்தது போல் வரலாறு இங்கும் வழங்தியே தீரும் என்பதில் மாற்றம் இல்லை! மௌனத்தை கலைத்து மக்கள் ஒன்று பட்டு எழுந்து பங்களித்தால் அந்த மாற்றங்கள் விரைவாக நிகழ்வது நிசமாகும். அழிகளில் இருந்து மக்கள் விரைவாக மீள்வதற்கும் இதுவே சிறந்த வழியாகும். கொல்லப்பட்ட எமது தோழர்கள் மக்களுக்காக உழைத்தவர்கள்! மக்களின் மகிழ்ச்சியை மட்டும் கனவு கண்டவர்கள்! அந்த கனவுகளை வென்றெடுப்பதற்காக தொடர்ந்தும் நாம் உறுதியுடன் உழைப்பதே நாம் எமது தோழர்களுக்கு செலுத்தும் மரியாதை ஆகும்!

கண்டனங்களும் கண்ணீர் அஞ்சலிகளும் மட்டும் இது போன்ற உயிர்க்கொல்லிகளின் கொடிய செயல்களுக்கு தீர்வு காணப் போதுமானவைகள் அல்ல! யுத்தமற்ற வாழ்வையும் அர்த்தமுள்ள அரசியல் தீர்வையும் எமது தேசத்தில் உருவாக்குவதன் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளில் சுயலாபங்களுக்காக ஒட்டிக்கொண்டு மக்களின் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளை அகற்றி விடுவதே சிறந்த வழிமுறையாகும்!

தகவல் தொடர்பு செயலாளர்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) -12.10.06

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல்; அதிபர் புஷ் கட்சி தோற்கும்: கருத்துக் கணிப்பு முடிவு
Next post சாம்பியன் கோப்பை கிரிக்கெட்: இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி