ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு, பாராளுமன்றக் குழு நாளை கூடுகிறது

Read Time:2 Minute, 21 Second

SLK.Map.1.jpgதேசிய பொது வேலைத்திட்டத்துக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கிய கூட்டங்கள் நாளை திங்கட்கிழமை இடம்பெறவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று ஊடகமொன்றுககுத் தெரிவித்தார். தேசிய பொது வேலைத் திட்டத்தின் கீழ் அரசுடன் இணைந்து செயற்பட முன்வந்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சி பொது வேலைத்திட்டத்துக்கு கட்சியின் அங்கீகாரம் பெற்றுக் கொண்டதன் பின்னரே புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளத் தீர்மானித்ததாகவும் அதற்கமையவே நாளை திங்கட்கிழமை கட்சியின் பாராளுமன்றக் குழுவும், செயற்குழுவும் கூடி யோசனைகளை ஆராய்ந்து அங்கீகாரம்பெற முடிவு செய்துள்ளதாக அத்தநாயக்க கூறினார்.

பெரும்பாலும் பொதுவேலைத்திட்டத்துக்கு கட்சியின் ஒருமித்த அங்கீகாரம் கிட்டலாமெனத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் நாளைய கூட்டத்தின்போது அமைச்சரவையில் இணைந்தகொள்வது குறித்து எத்தகைய பேச்சுக்களும் நடைபெறமாட்டாதெனவும் கூறினார்.

அடுத்து வரும் 23ம்திகதியன்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படக்கூடிய விதத்தில் செயற்பாடுகள் துரிதப்படத்டதப்பட்டு வருவதாகக் கூறிய அத்தநாயக்க ஜனாதிபதியினதும், எதிர்க்கட்சித் தலைவரினதும் விருப்பத்துக்கிணங்க புனித நோன்புப் பெருநாள் தலைப்பிறையன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இணக்கம் காணப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழர் பகுதியில் ஒரே கிராமத்தின் மீது 48 குண்டுகளை வீசியது ராணுவம்
Next post ஐ.நா.தடைவிதிப்பை வட கொரியா நிராகரித்தது உலக நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக கண்டனம்