சிறுநீரகத்தை உணவு மூலம் பாதுகாக்கலாம்!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 3 Second

உடல் நலம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகமாகி உள்ளபோதும், சிறுநீரகத்தை பற்றிய விவரங்களும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து கொள்ளவில்லை. உலகத்தில் 10 விழுக்காடு பேர் சிறுநீரகப்பிணிகளால் அவதிப்படுகின்றனர்.

1) சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு ஒரே அருமருந்து தண்ணீர்தான். தாகம் எடுத்தால் (மட்டுமே) உடனே நீரை பருகவேண்டும்.

2) பேக்கரி பதார்த்தங்களை தவிர்க்கவேண்டும்.(ஈஸ்ட் கலந்தது)

3) கல்லில் சுட்ட பதார்த்தங்களை [தோசை, ஆம்லெட்) தவிர்க்க வேண்டும். (வேண்டுமென்றால் மாதம் இருமுறை சாப்பிடலாம்.)

4)அதிக அளவில் கோதுமை உணவு மற்றும் நிலக்கடலை உண்பதும் தவறு. (இரண்டிலும் உப்புசத்து அதிகம் உள்ளதால் சீறுநீரகத்திற்கு கேடு விளைவிக்கும்.)

5) எண்ணையில் பொரித்த உணவு, உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.

6) பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டால் முடிந்த அளவு குறைத்து கொள்ளலாம்.

7) புகைப்பிடித்தல், புகையிலை உபயோகித்தல் சிறுநீரகங்களை பாதிக்கும்.

8) சிறுநீரகங்களை பாதிக்கும் சிறிய வலிகளுக்கு கூட மருந்து கடையில் மாத்திரை சாப்பிடுவோருக்கு நாளடைவில் சிறுநீரகங்கள் செயலிழக்க வாய்ப்புண்டு.

9) அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது நல்லது.

10) அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.

11) அதிகமான பருப்பு உட்கொள்வது நல்லது.

12) முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்

13) குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.

14) குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.

15 )குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.

16) சிறுநீரை அடக்கிக் கொள்வதை தவிர்க்க வேண்டும்

17) பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட உணவுமுறைகளை கடை பிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே
உள்ளது.

மருந்து

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையை விட குறைவாக சுரக்கும். இதனால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் தான் அவை கூடிய சீக்கிரமே செயலிழக்கிறது.

1) சிறுநீரக நோயாளிகளுக்கு தண்ணீருக்கு அடுத்தபடியாக உயரிய மருந்து – உண்ணா நோன்பு. வாரத்தில் ஒரு நாள் வயிறு, குடல் , கழிவு மண்டலங்களுக்கு நல்ல ஓய்வு தேவை. உண்ணாவிரதம் இருப்பதால், நம் உடம்பிலுள்ள ஒட்டு மொத்த ரத்தமும், கழிவு மண்டல சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சிறுநீரகக் கழிவுகள் விரைவில் வெளியேற வாய்ப்பு கிட்டுகிறது.

2) உண்ணாவிரதத்துடன் சூரிய சக்தி குளியலும் எடுத்தால், உடம்பின் திரவக்கழிவுகள் வியர்வையாக வெளியேறிவிடும். இதனால் சிறுநீரகங்களுக்கு போதுமான ஓய்வு கிட்டும். வேலைப்பளுவும் குறைகிறது.

3) உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவதும், மதியம் முள்ளங்கி சேர்த்து கொள்வதும் நல்ல பலனளிக்கும்.

4) வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரககற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.

ஆயு‌‌ர்வேத‌ மருந்து

1) வார‌த்தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளியி‌ல் 2 முறை ந‌ல்லெ‌ண்ணெ‌ய், விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து சூடா‌க்‌கி, அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகுதிகளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

2)அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கறிவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரகம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேரட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெதுப்பான ‌நீரை‌ப் பருகுத‌ல்
ந‌ல்லது.

இயற்கை மருத்துவம்

1) தர்பூசணியால் மஞ்சள் நிற சிறுநீர் மாறும்.

2)முந்திரி பழத்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

3) எலுமிச்சையால் சிறுநீர் கடுத்தல் மறையும்.

4) நெல்லியால் நல்ல நலம் கிட்டும்”

5) காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்பி‌ங் செ‌ய்த‌ல் ‌மிகவும் ந‌ல்லது.

இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க்க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் வெளிச்சமாக திகழும் திருநெல்வேலி தம்பதியினர்! ! (மகளிர் பக்கம்)
Next post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)