புலிகளின் தற்கொலைத் தாக்குதல் நடந்த காலி துறைமுக நகரில் ஊரடங்கு தளர்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Read Time:3 Minute, 16 Second

galle-1.jpgவிடுதலைப் புலிகள் புதன்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்திய இலங்கையின் துறைமுக நகரான காலியில் போலீஸôர் ஊரடங்கு உத்தரவை வியாழக்கிழமை தளர்த்தினர். சிறுபான்மைத் தமிழர்கள் மீது சிங்களர்களின் இனவெறித் தாக்குதல் நடைபெறலாம் என்பதால் அத் துறைமுக நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கைத் தீவின் தென் கோடியில் உள்ள காலி துறைமுகத்தின் மீது, விடுதலைப் புலிகள் புதன்கிழமை அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தை அடுத்து, காலி நகரில் உள்ள கடை வீதியில் தமிழர்களின் கடைகளை சமூக விரோத கும்பல் சூறையாடியது. இதையடுத்து நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வியாழக்கிழமை இந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இருப்பினும் இன மோதல்கள் நடைபெறக் கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன என இலங்கை போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த புதன்கிழமை, புலிகளின் இரண்டு படகுகள் துறைமுகத்தின் மீது ராக்கெட் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும், 3 தற்கொலைப் படை படகுகள் கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாகவும் புலிகள் ஆதரவு இணைய தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் 4 அல்லது 5 போராளிகள் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என போலீஸôர் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், காலி துறைமுக நகருக்குச் செல்ல வேண்டாம் என தனது குடிமக்களுக்கு இணைய தளத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா. முன்னதாக கொழும்பு நகரின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது.

புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்தாலும், இம்மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுகளில் இருதரப்பையும் பங்கேற்கச் செய்ய நார்வே மற்றும் ஜப்பானிய தூதர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

நார்வே சமாதானத் தூதர் ஜான் ஹேன்சன்-பாயர், இது தொடர்பாக கிளிநொச்சியில், புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனுடன் புதன்கிழமை பேச்சு நடத்தினார்.

galle-1.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இராக்கில் இம்மாதம் 70 அமெரிக்கப் படையினர் பலி
Next post 2 படகுகள் மோதியதில் 50 ராணுவ வீரர்கள் பலி