By 22 August 2021 0 Comments

தலிபான்களின் எழுச்சியால் சீனா எதிர்நோக்கும் நிலைமை என்ன? (கட்டுரை)

இன்று முக்கிய பேசுபொருளாக இருப்பது ஆப்கானிஸ்தான் பற்றிய விடயம்தான். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றி இருப்பது பற்றி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தலிபான்களை நல்லவர்கள், என்றும் தீயவர்கள் என்றும் பலரும் பல்வேறுவிதமாகக் கூறுகின்றனர்.

எது எப்படியிருந்தபோதிலும் தலிபான்களை மிகக் கெட்டவர்களாகக் காட்டுவது அவர்களுக்கு எதிரான விஷமப் பிரசாரங்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

இதைத்தான் சில தினங்களுக்கு முன்னர் எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரருக்கு வழங்கிய பேட்டியில் தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன் கூறியிருந்தார்.

அத்துடன் அவர் அந்தப் பேட்டியில் தலிபான்களை ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளாகக் கருதக்கூடாது, நாங்கள் விடுதலைப் போராளிகள், உங்களுடைய முன்னோர்கள் உங்கள் நாட்டின் விடுதலைக்காக எப்படி போராடினார்களோ அப்படி போராடுபவர்கள். ஆனால் நாங்கள் விஷமப் பிரசாரம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருந்தார்.

தலிபான்களின் வரலாற்றையும் அவர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதையும் நோக்குகையில் அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதையும் தாய் மண்ணின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்பதையும் அறியமுடிகிறது.

மாணவ சமுதாயத்திலிருந்து தோன்றிய இந்த தலிபான்கள் மன உறுதிமிக்க வீரர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். அதனால்தான் வல்லரசுகளான ரஷ்யாவையும், அமெரிக்காவையுமே பின்வாங்கச் செய்தனர்.

அதுமட்டுமா இப்பொழுதும்கூட அமெரிக்காவின் நவீன ரக யுத்த ஆயுதங்களைக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான அரசாங்கப்படையினரால் சாதாரண யுத்த ஆயுதங்களைக் கொண்டிருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான படையினரான தலிபான்களுடன் மோதமுடியாமல் பின்வாங்கியுள்ளனர். ஆதலால் பிரசாரங்களை மட்டும் நம்பி தலிபான்களை ஒரேயடியாகக் கெட்டவர்கள் என்று எடைபோட்டுவிடக்கூடாது.

தலிபான்களின் எழுச்சியால் சீனாவின் எதிர்காலம் எப்படியிருக்குமென்று நோக்குவோமானால், சீனாவும் தலிபான்களின் வருகையால் அச்சமுற்றிருப்பதாகவே தெரிகிறது. முக்கியமாக சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உறுதியற்ற நிலை பரவக்கூடுமென்று அச்சமுற்றிருக்கிறது சீனா. எனினும் தலிபான்களை நிர்வகிக்க பாகிஸ்தானால் உதவமுடியும் என்ற நம்பிக்கையில் நிலைமையை மெதுவாகவே அணுகுகிறது.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு தாமிரம், நிலக்கரி, இரும்பு தாது, லித்தியம் மற்றும் யுரேனியம் அத்துடன் எண்ணெய் உள்ளிட்ட கனிம வளங்கள் உள்ளன. ஆனாலும் யுத்த பூமியான இங்கு கொள்வனவுகளை செய்வதில் ஆர்வம் கொள்ள முடியாத நிலையும் நிலவுகிறது. பீஜிங் ஆப்கானிஸ்தானை மிகவும் ஆபத்தான சூழலாகக் கருதுகிறது. அதனை எந்த ஒரு வாய்ப்பாகவும் விரும்புவது ஓர் இரண்டாம் நிலைக்கருத்தாகுமென்று சீன-பாகிஸ்தான் அக்ஸிஸ் ஆசிரியர் அன்ட்ரு ஸ்மோல் தெரிவித்தார்.

இஸ்லாமாபாத் மற்றும் காபூலுடனான சீனாவின் உறவுகளை ஸ்மோல் பல ஆண்டுகளாக கண்காணித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராந்திய ஒருமைப்பாட்டு தன்மையிலும், சின்ஜியாங் மகாணத்தில் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதிலும் பீஜிங் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும் ஸ்மோல் மேலும் தெரிவித்தார். இதேவேளை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளும் சீனா இங்கு உள்ளுர் உய்குர் இன முஸ்லிம்கள் மீது, பரவலான துன்புறுத்தல்களை மேற்கொள்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றன. இருப்பினும், சீனா இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.

சீனா ஆகானிஸ்தானில் பல முதலீடுகளைச் செய்து தோல்வியடைந்துள்ளது. அதனால் தலிபான்கள் எவ்வித தாக்குதல்களும் நடத்தமாட்டோமென்று உறுதி கூறியும், சீனா திட்டங்களை தொடரவில்லை. எல்லையில் உள்ள ஆறு நாடுகளில் ஒன்றான சீனா, ஆப்கானிஸ்தானில் செயல்பட பல ஆண்டுகள் இருந்தன.

நிலத்தால் சூழப்பட்ட நாடு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருப்பதால், சீனா அங்கு தமது நாட்டு நிறவனங்கள் முதலீடு செய்வதை விரும்பவில்லை என்று சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கல்விக்கான ராஜரத்தினம் பாடசாலை சிரேஷ்ட தலைவர் ரப்பெல்லொ பண்டுச்சி கூறினார்.

பழிவாங்கும் கொலைகளில் ஈடுபடுவதில்லையென்றும், பெண்கள் கல்வியை தொடரலாம் என்றும் தலிபான்கள் உறுதி கூறியுள்ளனர். ஆனாலும் அவர்களின் நிர்வாகம் எப்படியிருக்மென்று தெரியவில்லையென்றும் பண்டுச்சி கூறினார்.Post a Comment

Protected by WP Anti Spam