இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம்

Read Time:3 Minute, 41 Second

Al.Haida.1.jpgஇங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்கா நடத்திவரும் நடவடிக்கைகள் முழுப்பலனைத் தரவில்லை. அல்கொய்தா தலைவர்களும், மற்றவர்களும் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்கள் இந்த 4 ஆண்டு காலத்தில் மேலும் பலம் அடைந்து உள்ளனர். அமைப்பு ரீதியாக மேலும் வலுவடைந்து உள்ளனர். அவர்கள் இங்கிலாந்து நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் 7-ந் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் ரெயில் நிலையங்களிலும், பஸ்களிலும் குண்டு வைத்து வெடிக்கச்செய்தனர். இதில் பலர் உயிர் இழந்தனர். இதைவிட பெரிய அளவில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

அது ஒரு தொடக்கம் தான்

ஏற்கனவே நடந்த தாக்குதலை அவர்கள் ஒரு தொடக்கமாக கருதுகிறார்கள். இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த மிக அதிகமான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்து நாட்டுக்கும் காலம்காலமாக இருந்து வரும் தொடர்பு காரணமாக இங்கிலாந்தில் எளிதில் தாக்குதல் நடத்த முடியும் என்பது அவர்கள் முடிவு.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் இரு நாடுகளுக்கும் இடையே சென்று வருகிறார்கள். அவர்களில் தீவிரவாதிகள் எளிதில் ஊடுருவ முடியும் அதோடு அவர்கள் அனைவரையும் கண்காணிப்பது கடினம் என்பதும் அல்கொய்தா தலைமைக்கு வசதியாக அமைந்து விட்டது.,

இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியினர்களில் சிலரை, தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதற்கு வசதியாக வாடகைக்கு அமர்த்திக்கொள்ளவும் முடியும் என்று அல்கொய்தா தலைமை நினைக்கிறது. இந்த காரணங்களால் இங்கிலாந்து நாட்டை தாக்குதலுக்கான இலக்காக அல்கொய்தா தேர்ந்து எடுத்து உள்ளது.

தட்டுப்பாடு இல்லாமல்

கடந்தஆண்டு ஜுலை மாதத்துக்குபிறகு பலமுறை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டனர். இதை இங்கிலாந்து போலீஸ் உளவுத்துறை முன்கூட்டியே கண்டுபிடித்து முறியடித்தது. இது தொடர்பாக பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருந்தாலும் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டதும், அந்த இடத்துக்கு அந்த வேலைக்கு இன்னொரு தீவிரவாதி நியமிக்கப்படுகிறான். இப்படி பஞ்சம்இல்லாமல் தீவிரவாதிகள் கிடைப்பதும் இங்கிலாந்து தேர்ந்து எடுக்கப்படுவதற்கு ஒரு காரணம் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரான்ஸ் தமிழ்பெண்ணை போலீசார் மீட்டனர் `செல்போன்’ காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்தது
Next post அமெரிக்க உதவிச் செயலர் ரிச்சட் பவுச்சர்