மக்கள் வெளியேற புலிகள் தடை – பிரதேசவாசிகள் தகவல்கள்!!

Read Time:3 Minute, 18 Second

anitiger0201வன்னியில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு வரவே விரும்புகிறார்கள் எனவும்இ எனினும்இ மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் கடுமையாகத் தடுத்து வருவதாகவும் அந்தப் பிரதேசத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரப் பிற்பகுதியில் அங்கிருந்து வெளியேற முற்பட்ட பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பொதுமக்கள் கால்களில் கடுமையாகக் காயமடைந்திருப்பதாக அங்கிருக்கும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் அனைவரும் கால்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இது தவிரவும்இ வெளியேற முற்படும் பொதுமக்கள் மீது மட்டைகள்இ பொல்லுகளால் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் பிரதேசவாசிகள் எமக்குத் தகவல் தெரிவித்தனர். வெளியேற முற்படும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் மிகவும் கடுமையாக நடந்துகொள்வதால்இ மக்கள் மிகவும் அச்சமடைந்து காணப்படுவதாக அவர்கள் எமக்குத் தகவல் தெரிவித்தனர்.

உணவுத் தட்டுப்பாடு

இதேவேளைஇ அங்கு உணவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும்இ பசியால் மக்கள் மிகவும் துன்பப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். உணவுத் தட்டுப்பாடு காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றை உடைத்து மக்கள் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர்கள் எமக்குத் தகவல் தெரிவித்தனர்.

உணவுப்பொருள் தட்டுப்பாடுஇ மருந்துகள் இன்மைஇ சுகாதார வசதிகள் இல்லாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், எறிகணைத் தாக்குதல்களுக்கும் முகம்கொடுக்கும் நிலையில் அங்கிருந்து வெளியேறவே விரும்புவதாகவும்இ எனினும்இ விடுதலைப் புலிகளின் கடுமையான நடவடிக்கை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமல் மக்கள் அந்தரத்தில் இருப்பதாகவும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உள்ளுராட்சி அதிகார சபை சட்ட மூல வாக்கெடுப்பு மே 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு
Next post மோதல் நிறுத்தத்தால் பயனில்லை? -கோதபாய ராஜபக்ச