யுத்த நிறுத்தம் புலிகளைப் பலப்படுத்த வழிகோரும் -ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தலைவர்

Read Time:3 Minute, 24 Second

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்லுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுக்கவில்லை என அதன் தலைவர் க்லோட் ஹெலர் தெரிவித்துள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பொதுமக்கள் தப்பி வரும் தற்போதைய நிலையில் யுத்தநிறுத்தமொன்றைக் கோருவது புலிகளைப் பலப்படுத்துமே தவிர சிவிலியன்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை எந்தவகையிலும் தடுத்து நிறுத்தாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பொதுமக்கள் தப்பி வரும் தற்போதைய நிலையில் யுத்தநிறுத்தமொன்றைக் கோருவது புலிகளைப் பலப்படுத்துமே தவிர சிவிலியன்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை எந்தவகையிலும் தடுத்து நிறுத்தாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உத்தியோகபூர்வமற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் வடக்கில் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறிவரும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய முன்வர வேண்டுமென பாதுகாப்புச் சபை கேட்டுக் கொள்கிறது. இந்தப் பிரச்சினையை விரைவாக முடிப்பதற்கான ஒரேவழி புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைந்து அரசியல் தீர்வொன்றுக்கு வழிவிடுவதேயாகும். புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பினர். அவர்கள் அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவது கண்டிக்கப்பட வேண்டும்;. புலிகள் அப்பாவிப் பொதுமக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்பு வலயத்திலிருந்து பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் வெளியேறியுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விஷேட தூதுவரான விஜய் நம்பியார் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் தொடர்ச்சியாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “யுத்த நிறுத்தம் புலிகளைப் பலப்படுத்த வழிகோரும் -ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தலைவர்

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    உலக நடப்பு தெரியாமல் புலிக்கு கொம்பும் முளைத்திருக்கு என்று புலி துள்ளியதற்கு இலங்கை மக்கள் செலுத்திய விலை மிக மிக அதிகம்

Leave a Reply

Previous post வாழும் ஆசை கொண்ட பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் -தயாமாஸ்டர்
Next post புலிகளின் மிக முக்கிய நபர்களில் ஒருவரும் நீதித்துறைப் பொறுப்பாளருமான பரா வவுனியா நலன்புரி முகாமில் மக்களோடு மக்களாக வந்து தஞ்சம்!!