யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் கனடா வலியுறுத்து

Read Time:2 Minute, 33 Second

இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோறன்ஸ் கனொன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை நிறுத்துமாறு கடந்த வியாழக்கிழமை தாம் தெரிவித்திருந்ததை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மோதல்ப் பகுதியிலிருக்கும் பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டுமென்பதுடன், மனிதநேய பணியாளர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவேண்டுமெனவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். “நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நாங்கள் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இந்த மாதம் அழைப்புவிடுத்திருந்தோம். பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எமக்குத் தேவை” என்றார் கனேடிய வெளிவிவகார அமைச்சர். சர்வதேசமும், ஐக்கிய நாடுகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தவேண்டுமெனக் விடுத்திருந்த அழைப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்திருப்பதாகவும் லோறன்ஸ் கனொன் சுட்டிக்காட்டினார். சிறிய பகுதியில் 50,000 பொதுமக்கள் இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த கனேடிய சர்வதேசக் கூட்டுறவு அமைச்சர் பெவர்லி ஜே.ஒடாவே மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென அனைத்துத் தரப்பிடமும் கோரியிருந்ததுடன், 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவிருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

5 thoughts on “யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் கனடா வலியுறுத்து

  1. புலிகளின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை எடுத்துப்பார்க்கையில் வன்னியில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் யுத்தமானது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. ஒரு விடுதலை போராட்டம் என்பது அடிப்படையில் மக்களுக்கானது. எனவே அது முழுக்க முழுக்க மக்களை சார்ந்தே நிற்கவேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் புலிகளின் அகங்கார அதிகார நலன்களுக்குமிடையே பாரிய முரண்பாடு காணப்படுகிறது. புலிகள் தமது கேள்விக்கிடமற்ற அதிகார அகங்கார நலன்களையே சுயநிர்ணய உரிமை என்கிறார்கள். அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் பட்டுத் துப்பட்டாவினால் புலிகள் தமது குரூர சொரூபத்தை மூடி மறைக்க முயல்கிறார்கள்.
    தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் உள்ளடக்கியது. தனி மனிதனின் கருத்து சுதந்திரம் பெண்களின் உரிமைகள் சிறார்களின் உரிமைகள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் தொழிற்சங்க உரிமைகள் கருத்து வேறுபாடுகளுக்கும் உடன்பாடுகளுக்குமான இடைவெளிகள் இவற்றை நிராகரிப்பதாக இவற்றுடன் முரண்படுவதாக இனங்களின் சுயநிர்ணய உரிமை இருக்க முடியாது.
    மக்கள்மீது நம்பிக்கையில்லாமல் அவர்கள்மீது அடக்குமுறை செலுத்தும் புலிகள், ஆயுதங்கள்மீது மட்டுமே தமது முழு நம்பிக்கையையும் வைத்து வந்துள்ளனர். மேலும் ஒரு விடுதலை போராட்டத்தின் வெற்றி என்பது தனது பிரதான எதிரி யார்; என்பதை இனம்காண்பதிலேயே தங்கியுள்ளது. ஆனால் புலிகள் சாதாரண தமிழ்-சிங்கள-முஸ்லீம் மக்களை எதிரியாக தீர்மானித்து, அவர்கள் மீது தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். ஒரு விடுதலை இயக்கம் தனது சொந்த மக்களை மட்டுமல்லாது, நீதியை விரும்பும் அனைத்து மக்கள் உட்பட, சகல வளங்களையும் திரட்டிப் போராடாமல், ஒருபோதும் வெற்றிபெறமுடியாது என்பதை உலகின் பல விடுதலைப்போராட்டங்கள் நிரூபித்துள்ளன. ஆனால் புலிகளோ தமிழ் மக்களின் விடுதலைக்காக போராட புறப்பட்ட பல போராளிகள், ஜனநாயகவாதிகள், கல்விமான்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்து தமது எதேச்சாதிகார ஏகத்தலைமையை மக்கள்மீது திணித்துள்ளனர்
    புலிகள் தாம் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போரிடும் ஒரு இயக்கம் என்று தம்மை சொல்லிக்கொண்டாலும், உண்மையில் புலிகள் அவ்வாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கமானது எல்லா இன மக்கள் மீது கொள்ளவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக, புலிகள் சாதாரண சிங்கள மக்கள் மீது தொடர்ச்சியாக கொலைவெறி தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். சிங்கள மக்களின் கிராமங்கள், புத்தகோவில்கள், பஸ்கள், புகைவண்டிகள், சந்தைகள், பஸ்நிலையங்கள், அரசகாரியாலயங்கள் என சகல இடங்களிலும் புலிகள் சிங்கள மக்களை தாக்கியும் கொலைசெய்தும் வருகின்றனர். அதேபோல, சிறுபான்மையினரான, முஸ்லீம் மக்கள் மீதும், தொடர்ச்சியாக தாக்குதல்களை நடாத்தி, புலிகள் அவர்களை படுகொலைசெய்து வருகின்றனர். 1990ல் வடக்கிலிருந்து சுமார் ஒரு லட்சம் முஸ்லீம் மக்களை ஒரு சில மணித்தியாலயங்களில் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்ததுடன், காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் புகுந்து தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நுர்ற்றுக்கணக்கான முஸ்லீம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டும் கொன்றனர். அத்துடன், தொடர்ச்சியாக முஸ்லீம் கிராமங்களுக்குள் புகுந்து மக்களை கொலைசெய்வதுடன், அவர்களது சொத்துக்களையும் அபகரித்தும், அழித்தும் வருகின்றனர். சிங்கள மக்கள் மீதும், முஸ்லீம் மக்கள் மீதும் புலிகள் மேற்கொள்ளும் இத்தாக்குதல்கள் அப்பட்டமான தமிழ் இனவெறி செயல்பாடுகளேயன்றி வேறொன்றுமல்ல.
    அதேநேரத்தில், புலிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவான பல்வேறு விடுதலை இயக்கங்கள், தமிழ் அரசியல் கட்சிகள் என்பனவற்றை அழித்தும், அவற்றின் உறுப்பினர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் வந்துள்ளனர். அத்துடன் கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், மனித உரிமைவாதிகள், அரச அதிகாரிகள் என பல்வேறு தரப்பட்டவர்களையும் நூற்றுக்கணக்கில் கொன்றொழித்துள்ளனர். வடக்கு – கிழக்குப் பகுதிகளில் வாழுகின்ற, தமிழ்மக்களின் ஜனநாயக உரிமைகளான – பேச்சு, எழுத்து, கூட்டம் கூடுதல், சுதந்திர நடமாட்டம் போன்ற அனைத்தையும் முற்றுமுழுதாக புலிகள் தடைசெய்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, புலிகள் ஒருபோதும் ஒரு விடுதலை இயக்கமாக இருக்கமுடியாது. உண்மையில் அது, அடிப்படையில் ஒரு தமிழ் இனவாத இயக்கமாகும்.
    மறுபக்கத்தில், புலிகள் தனிநாட்டுக்கான போராட்டம் என்ற போர்வையில் நடாத்தி வருகின்ற அழிவுகரமான யுத்தம், இலங்கையின் தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், இறைமை என்பனவற்றுக்கு சவாலாக அமைந்துள்ளதுடன், தமிழ் மக்கள் முன்னர் வாழ்ந்துவந்த, சாதாரண வாழ்க்கையை கூட சீரழித்து சின்னாபின்னமாக்கியுள்ளது. புலிகளின் இந்த யுத்தத்தால், தமிழ்மக்கள் இன்று ஒரு தேசிய இனம் என்ற அந்தஸ்தை இழந்து, சொந்த நாட்டிலும், உலகெங்கிலும் ஒர் அகதி கூட்டமாக மாறியுள்ளனர்.
    இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்த அனைத்து முயற்சிகளையும் புலிகள் சீர்குலைத்ததுடன், மீண்டும் மீண்டும் யுத்தப்பாதையையே தேர்ந்தெடுத்து வந்துள்ளனர். எமது அயலிலுள்ள நெருங்கிய நட்பு நாடான இந்தியா தலையிட்டு, தமிழ்மக்களுக்கு ஓரளவு நீதியான ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஒப்பந்தமொன்றை 1987ல் உருவாக்கியபோதும், பிரேமதாச போன்ற சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து புலிகள் அதை முறியடித்ததுடன், இந்தியாவுடன் யுத்தம் ஒன்றிலும் ஈடுபட்டு, அந்நாட்டின் தலைவரான ராஜீவ் காந்தியையும் கொலைசெய்தனர். அதேபோல, சர்வதேச சமூகம் இனப்பிரச்சினைக்கு மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டபோதும், புலிகள் அதையும் ஏற்க மறுத்துவிட்டனர்
    புலிகளின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும், அவர்கள் ஜனநாயக வரம்புகளுக்குள் உள்ளடக்கப்பட முடியாத, ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து நிற்கிறது. புலிகளை ஜனநாயக முறையில் கையாள்வதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும், சர்வதேச சமூகமும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்விகண்டுவிட்டன. புலிகளது வரம்பற்ற எதேச்சாதிகார போக்கை கட்டுப்படுத்தும் அல்லது தடுத்து நிறுத்தும் ஆற்றல் உள்ள, தமிழ் அமைப்புகளோ தனிமனிதர்களோ எவருமே இன்று தமிழ் சமூகத்தில் கிடையாது. அவர்கள் எல்லோரையும் புலிகள் ஏற்கெனவே கொன்றொழித்துவிட்டனர். புலிகள் இன்று சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமின்றி, தமிழர்களுக்கும் பிரச்சினைக்குரிய ஒர் அமைப்பாகிவிட்டது. மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கு தேவையான சரியான அடிப்படைகளை உருவாக்காமல் நடாத்தப்படும் எந்தவொரு போராட்டமும், இறுதியில் தோல்வியைத் தழுவும் என்பதை புலிகளின் நீண்ட ஆயுதப்போராட்ட வரலாறு எடுத்துக்காட்டி நிற்கிறது.
    எனவே புலிகளின் பிரச்சினையை முற்றுமுழுதாக தீர்த்து, இலங்கையின் அனைத்து இன மக்களையும் பாதுகாப்பதானால், புலிகளை முற்றுமுழுதாக தோற்கடித்து, அழிப்பதைத்தவிர வேறு எந்த வழியும் இல்லை. அந்த வகையில், இலங்கை அரசாங்கம் தற்பொழுது புலிகளுக்கு எதிராக மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள், தவிர்க்க முடியாதவையும் அவசியமானவையுமாகும். எனவே புலிகளுடன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இனப்பிரச்சினை தீர்வுக்கு புலிகளுடன்தான் பேசவேண்டும் என சில தரப்புகள் கோருவது அர்த்தமற்றது.

  2. தம்பையாவுக்கு புலி்ப்பித்து பிடித்து விட்டது நல்லதொரு வைத்தியசாலையில் கொண்டுபோய் சேருங்கோ எண்டாலும் ஆள் தப்பிறது ரொம்பக் கஷ்டம்.

  3. சாமானியன்… நீங்கள் என்ன குளிசை போட்டு சுகம் வந்ததெண்டு சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும்.

  4. இலங்கை கனடாவின் ஆட்சிக்குள் இல்லை…
    கனடா வேண்டுமானால் இன்னமும் இங்கிலாந்தின் அரசியை தமது அரசியாகவும், இங்கிலாந்தின் ஆட்சியின் கீழும் இருக்கலாம்…

    ஆனால் இலங்கை ஒரு தனி நாடு….கனடா சொல்லி இலங்கை கேட்கும் நிலையில் இல்லை… இதை உணராத மடையர்கள்..இங்கே ஆர்ப்பாட்டம்… ஹை வே மறியல்…அதுவும் மதெர்ஸ் டே அன்று.. ரொம்ப கேவலம்..
    கனடியன் கூட முகம் சுளிக்க ஆரம்பித்து விட்டார்கள்…

    மக்கள் தான் இறங்கி போராடி தமிழ் ஈழம் பெற வேண்டுமால் புலிகள் ஏன்? ஏன் கொலைகள்?
    நாங்கள் இங்கேயே ஆர்பாட்டம் செய்து ரத்தமிலாமல் தமிழ் ஈழம் பெறலாம்….

    புலிகளை காப்பாத்த சில மடையர்களின் ஏற்பாடு…

Leave a Reply

Previous post மக்கள் இருக்கும்வரை தோல்வியில்லை: விடுதலைப் புலிகள்
Next post அடுத்தமாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ள 350 கர்ப்பிணித் தாய்மார்..