புலிகளின் கடல்வழித் தாக்குதல் முயற்சி படையினரால் முறியடிப்பு; 3 தற்கொலைப் படகுகள் தாக்கியழிப்பு; 5 மணி நேரம் சமர்

Read Time:3 Minute, 13 Second

முல்லைத்தீவு, வட்டுவாக்கலிலிருந்து சர்வார் தோட்டம் ஊடாக முன்னேறிச் செல்லும் படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட புலிகளின் கடல் வழி தாக்குதல்களை இராணுவத்தினர் வெற்றி கரமாக முறியடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். படையினரின் இந்த தாக்குதல்களில் கடற்புலிகளின் மூன்று தற்கொலை படகுகள் முற்றாக நிர்மூலமாக்கப் பட்டுள்ளதுடன் மேலும் பல படகுகள் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் ஆரம்பமான இந்த மோதல் நேற்று அதிகாலை 1.30 மணி வரையான சுமார் ஐந்து மணித்தியாலயங்களாக இடம்பெற்றதாக பிரி கேடியர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 59வது படைப்பிரிவினர் பிரிகேடியர் பிரசன்ன டி. சில்வா தலைமையில் நேற்று முன்தினம் தொட க்கம் வட்டுவாக்கல் சர்வார்தோட்டம் வரையான 300 மீற்றர் தூரம் முன்னேறிச் சென்றது. இந்தப் படைப்பிரிவின் தொடர் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பட்ட புலிகளின் நான்கு தாக்குதல் படகுகள் வேகமாக வந்துள்ளன. வட்டுவாக்கல் கரையோர பிரதேசம் ஊடாக வந்த இந்த தற்கொலை படகு களை இலக்கு வைத்து இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மூன்று படகுகள் முற்றாக நிர்மூலமாக்கப் பட்டதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை, முதலாவது தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்தில் புலிகளின் மற்றுமொரு படகு குழுவொன்று தாக்குதல் நடத்தும் நோக்குடன் வேகமாக வந்துள்ளன. இரவு நேரத்திலும் விழிப்பாக இருந்து இராணுவத்தினர் அந்தப் படகுகளையும் இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புலிகளின் தாக்குதல்களுக்கு முன்னர் படையினர் ஊடுருவி கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதால் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் அந்தப் படகில் வந்த புலிகளின் பலர் கொல்லப்பட்டிருப்பதாக பிரிகேடிர் சுட்டிக் காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கவலை: தாமதிக்கவும் இனி நேரமில்லை
Next post பாரிஸ் நகரின் ‘லாபோர்ஜ்’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் பெளத்த மத்திய நிலையம் தாக்கப்பட்டது; இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போகொல்லாகம வேண்டுகோள்