காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிகள் வெற்றி; ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தோற்றது

Read Time:3 Minute, 10 Second

இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய பாராளுமன்றத்தின் 543 ஆசனங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 258 ஆசனங்களையும், பாரதீய ஜனதாக கட்சி தலைமையிலான அணி 162 ஆசனங்களையும் வென்றுள்ளன. மூன்றாம், நான்காம் அணிகள் தலா 68, 24 ஆசனங்களையும் வென்றுள்ளன. இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங் தொடர்ந்து இருப்பார் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அறிவித்துள்ளார். இதேவேளை, தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 28ஆசனங்களை வென்றுள்ளது. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அணி 12 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் பலம் மிக்க சக்தியாக தி.மு.க. தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் துரோகமிழைத்து விட்டது என்ற தொனிப்பட்ட ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரங்கள் தோற்றுப்போனதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தமிழக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழர் விவகாரத்தை மிக அதிகளவில் தூக்கிப் பிடித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் வை.கோபாலசாமி தனது விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் 17,000க்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலுமே தோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட குறைந்தளவு ஆசனங்களையே தமிழ்நாட்டில் வென்றிருந்தாலும், அது ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரத்தினால் ஏற்பட்டதல்ல என்பதையே இது காட்டுகிறது என அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிகள் வெற்றி; ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தோற்றது

  1. ஈழமக்கள் அழிவை காட்டி ஆவேசமாக பேசின இவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டி விட்டார்கள்…
    இந்திய மக்கள் இனி இந்த பிசுபிசுப்பான வார்த்தைகளை நம்பமாட்டார்கள் எண்டு காட்டி விட்டார்கள்….
    அவர்கள் திருந்தி விட்டார்கள்… நாங்கள் எப்போ திருந்த போறோம்?

    காங்கிரசுக்கு வாழ்த்துக்கள்…..

  2. உலகம் எங்கோ போகிறது,,,,
    நாம் இன்னும் பாசிசம்..சிங்கள இனவெறி எண்டு கூறிக்கொண்டு முட்டாள்களாகவே இருக்கிறோம்…

    அன்னை இந்திரா காந்தியை சுட்டு கொன்ற சீக்கிய இனத்தவரான மன் மோகன் இன்று இந்திய பிரதமர்… இரண்டாவது தரம் பெரு வெற்றி….

    அடிமையாக இருந்த கருப்பு இன மக்களில் பிறந்த ஒபாமா இன்று உலகையே..ஆட்டி படைக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி…

    சிங்களவன் கூட இப்ப முன்னேறி விட்டான்.. 1983 இன அழிப்பு நடந்து 26 வருஷம் ஆகிவிட்டது….. இப்போ நாமே நம்மை நம் இனத்தை பலியிடுவதுக்கு காரணமாகி விட்டோம்……

    உலக மாற்றங்களோடு நாங்களும் மாறுவோம்… இனியும் காட்டு மிராண்டி தனம் வேண்டாம்……..
    இலங்கை நம் நாடு………சிங்களவர் தமிழர் முஸ்லிம் பறங்கியரின் நாடு.. பிரிவினை வேண்டாம்….

  3. தமிழ்நாட்டவரை நாங்கள் அரசியல் அறிவற்றவர்கள் விசில் அடிச்சான் குஞ்சுகள் என்று சொல்லுவோம். அவர்களுக்கு சீமான் பாரதிராஜா படம் காட்டி பார்த்தார்கள். எடுபடவில்லையே

    புலம்பெயர்ந்த தமிழர்தான் உண்மையான அரசியல் அறிவற்ற விசில் அடிச்சான் குஞ்சுகள்.

  4. தமிழக உறவுகள் என்றும் எமது தொப்புள்கொடி உறவுகள் தான் . அவர்கள் எமது பிரச்சனையைக் கரிசனையோடு நோக்குகின்றார்கள். அவர்கள் எமக்குக் காட்டும் ஆதரவை வைத்து அதனைத் தமக்குச் சாதகமாக்கி மதிமுக, பா.ம.க மற்றும் இடதுசாரிக் கட்சிகளும், நெடுமாறன் போன்றவர்கள் காட்டிய அதி தீவிரமான விடுதலைப்புலியாதரவையும், போராட்டங்கள், தீக்குளிப்புகள் என்ற பெயரில் அன்றாடம் பொதுமக்களின் சராசரி வேலைகளைக் கூட பார்க்க முடியாது செய்த அட்டகாசங்களையும் தமிழக மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்த் தான் இப்படித் தமக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதில் யார் முன் நின்று செயற்பட்டார்களோ அவர்களையெல்லாம் பாதிக்கபட்ட மக்களே வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். குறிப்பாக வை.கோவின் தோல்வியும், பா.ம.கவின் தோல்விகளும் இதனை பறைசாற்றுகின்றன. தாம் சார்ந்து நிற்கும் கட்சிதான் என்றும் அரசமைக்கும் என்று பாமக அடிக்கடி கூறும், ஆனால் அதை பா.ம.க அல்ல மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்பதையும் இத்தேர்தல் பா.ம.கவிற்கு புகட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறிய வேண்டுமென்று அறைகூவல் விட்டார்கள். இதை முன்னின்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கிய வை.கோவையே தோற்கடித்தவர் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் தான். காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றியீட்டியிருக்கின்றது. இதன் மூலம் பழைமையான பாரம்பரியம் நிறைந்த காங்கிரஸ் கட்சியை தமிழக மக்களும் புறந்தள்ள விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

    மொத்தத்தில் தமிழ்நாட்டில் தமக்கு ஏற்பட்ட அசௌக்கரியங்களினால் எப்படித் தமிழக மக்கள் ஆத்திரமுற்றார்களோ அதே நிலையை இன்று புலம் பெயர்ந்து வந்திருக்கும் இலங்கைத் தமிழர்களும் தாம் வாழும் நாட்டிலுள்ள மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திக் கொணர்டிருக்கின்றார்கள். இனியாவது தவறான வழிகளில் தம் நடவடிக்கைகளை எடுப்பவர்கள் தமது நடவடிக்கைகளில் மாற்றங்கள் கொண்டு வந்த தமது தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

Leave a Reply

Previous post பாதுகாப்பு வலயம் சுற்றி வளைக்கப்பட்டது.. புலிகள் பாரிய தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு அமைச்சு
Next post புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி: பெருந்தொகையான புலிகள் படையிடம் சரண்!!!