இலங்கை நிவாரண பணிகள்- மலைக்கும் ஐ.நா!

Read Time:1 Minute, 58 Second

கிட்டத்தட்ட 3 லட்சம் பேருக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் மிகப் பெரிது என்று ஐ.நா. மனிதாபிமானப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைக்கு அகதிகள் பெருமளவில் தங்கியுள்ள மாணிக் பார்ம் பகுதிக்கு மட்டும் உதவிக் குழுக்கள், நிவாரப் பணியாளர்கள் தங்களது வாகனங்களில் செல்ல தற்காலிகமாக அனுமதி தரப்பட்டுள்ளதாகவும், ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. உதவிக் குழுக்களின் லாரிகள், பிற வாகனங்கள் அங்கு செல்ல தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம். மேலும், மாணிக் பார்ம் பகுதியில் உள்ள ராணுவத்தினர், நிவாரணப் பணியாளர்களுக்கு இடையூறு செய்யாத வகையில் பிற பகுதிகளுக்கு மாற்றப்படவும் இலங்கை அரசு தரப்பில் இறங்கி வந்துள்ளனராம். இதன் மூலம் அகதிகள் முகாம்களின் நிர்வாகத்தை சிவில் அதிகாரிகள் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து அகதிகள் முகாம்களிலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கும் ஐ.நா. மனிதாபிமான விவகார பிரிவு, அங்கு சுகாதார அலுவலகங்கள் பெருமளவில் அமைக்க வேண்டியுள்ளது. டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆரோக்கியமான குடிநீர், துப்புறவு என பல பணிகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மடுதேவாலய பிரதேசத்தை மீட்டுத் தந்தமைக்காக அரசுக்கும் படையினருக்கும் நன்றி கூறுகிறோம் -யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சொளந்தரநாயகம்
Next post இடைத்தங்கல் முகாமில் பொன்தியாகம்!..; மக்கள் தர்மஅடி..!!!