By 20 August 2009 8 Comments

கனேடிய தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்..

lttecanadasathaகனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை சேகரித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டிருக்கும் கனேடிய தமிழ் மாணவர் சங்கத் தலைவரின் பல புகைப்படங்களை எவ்.பி.ஐ.புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. அவர் இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் இருந்த காட்சி கொண்ட படத்தையும், இயந்திர துப்பாக்கி ஒன்றை இயக்கும் படத்தையும் எவ்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. 29 வயதான சதா சரத்சந்திரன் என்ற இவர், புலிகளுக்கு, வானை நோக்கி ஏவக்கூடிய ஏவுகணை கொள்வனவிற்கு துணை புரிந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் அக்டோபர் ஆறாம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படும் போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஆயுள் தண்டனைக்கு ட்படுத்தப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மற்றொரு கனேடியரான நடராசா யோகராசாவும் அதே தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இவர்களைத் தவிர சகிலால் சபாரட்ணம் என்ற கனேடிய தமிழ் காங்கிரஸின் தகவல் தொடர்பு கணிப்பாளர் நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். அத்துடன், மேலும் மூன்று கனேடியர்கள் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். 2006 ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி நியுயோர்க் லோங் ஐலண்ட் பகுதியில் ஆயுத ஒப்பந்தகாரர் ஒருவருடன் பேச்சு நடத்திய சரத் சந்திரன் நிதி ஒரு பிரச்சினை அல்ல என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் கனடாவில் நிதி சேகரிப்பு குறித்து கலந்துரையாடல்களை நடத்தி அதனடிப்படையில் நிதிகளை சேகரித்தார். இதேவேளை, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கனடாவின் இரகசிய புலனாய்வு அறிக்கையின் படி, விடுதலைப் புலிகளுக்கு வருடமொன்றுக்கு 12 மில்லியன் டொலர்கள் நிதி சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.8 Comments on "கனேடிய தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.."

Trackback | Comments RSS Feed

 1. Canadian says:

  Holding a gun is not a crime. In USA people have the right to carry arms according to the constitution. In Europe armed training is must if you are over 18 and recruiting to the forces in USA is 16, so what is fussy about this guy getting training or holding a Gun. LTTE was self-style ruling organization according Norway’s peace deal and that time representing the Eelam Tamils.

 2. arya says:

  Holding a gun is not a crime, BUT Holding a gun of a Terror organization is crime and terorist. USA need to handover him to Sri Lanka.

 3. ஒற்றன் says:

  கனேடியன் உங்கள் கருத்து 100% சரியானதும் யதார்த்தமானதும் கூட….
  இங்க யாரிடம் தான் துப்பாக்கி இல்லை? அல்லது யார் தான் சுடும் பயிற்சி எடுக்கவில்லை? அங்க புலிகளை ஒழித்துவிட்டோம் என்று மகிந்தவே ஒப்பிக்கையிலை இவங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லா வேலை? பன்னாடைகள்!!!

 4. Canadian says:

  Arya,
  I guess you never read whole comment which I wrote. If LTTE is terror organization then why the SL govt broke peace deal with the LTTE and never banned till the last minute. And why all around the world 99 % of the Tamil people are carrying LTTE flag. I hope you are not a blind guy.

 5. Thampar Appa says:

  Canadian you are right again in a way nothing wrong with this guy holding a gun but intention for holding that gun was very very illigal.

  Yea Yea that 99% of the Tamil people were carrying those flags didn’t buy those flags and those were given to them. Now you turn back and have a look those 99% of the Tamil people may holding flags of convenient (Canadian). After all they all are (p)Mara Thamilans and they know how to survive among those self served (pocketed)Tamil millionaires

  Govt made the peace deal to save the 400,000 Tamils from death and they broke that peace deal to save the 300,000 Tamils from the Tigers clow.

 6. AMMAN says:

  ராஜபக்ச சகோதரர்கள் கொன்றுவிடுவது என்று முடிவு செய்தபின்பு அறநூறு வழக்கு என்ன ஆயிரம் வழக்கு கூட போடுங்கள். ஆனால் என்றாவது ராஜபக்ச சகோதரர்கள் மக்கள் முன்பு பதில் சொல்லும் காலம் வரும் அப்போது அவர்கள் எங்கு இருகிறிர்களோ தெரியாது. உலகத்திலே உள்ள குற்றங்களை கணக்கிட்டால் கூட எண்ணிக்கை அறுநூரை தாண்டாது. ஒரே விந்தையாக உள்ளது… இப்படியும் ஒரு மனிதனுக்கு குற்ற வழக்கில் தள்ள முடியுமா என்று. இதே பாணியை இனிமேல் நம் சிங்கள நாட்டு அரசியல்வாதிகள் கடைப்பிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்..ஒரு தனி நபர் மீது 600 குற்றச்சாட்டுகளா??? அப்படியென்றால் உங்கள் நாட்டில் எத்தனை விதமான குற்ற சட்டங்கள் உள்ளன xxx அனேகமாக குற்ற சட்டங்கள் அதிகமாக உள்ள நாடு ஸ்ரீலங்கா என கின்னஸ் புத்தகத்தில் எழுதலாம் போலுள்ளதே அடப்பாவிங்கள ஒரு முடிவு பண்ணிட்டிங்க இனி அவரை யார் காப்பாற்றுவது ? எதிரிகளை கண்டுகொள் .விழித்திடு தமிழ் மக்களே, விழித்திடு தமிழ் மக்களே,விழித்திடு தமிழ் மக்களே…3 லட்சம் மக்கள் முட்கம்பிவேலிக்குள், நிலத்தில் கால் வைக்கமுடியாத அளவு மழைநீர் வெள்ளத்தில் தத்தளிக்க, குடி நீருக்கு காத்திருக்க… Karuna மற்ற தண்ணியில் மிதந்துகொண்டுடிருக்கிறார்????

 7. Smart Thamilan says:

  பலி எடுக்கவும்
  பலி கொடுக்கவும் மட்டுமே தெரிந்த
  புலிகளுக்காக நம்மக்கள் பட்ட வலி
  நாம் கொடுத்த விலை எண்ணிலடங்காது!!
  நம் பிள்ளைகளை பலி கொடுத்தோம்
  நமது உடமைகளை இழந்தோம்
  நமது ஊரை உறவுகளை இழந்தோம்

  ராஜபக்சே சகோதரர் இல்லாது போயிருந்தால்
  நாமெல்லாருமே பலி கொடுக்கப்பட்டிருப்போம்

 8. Smart Thamilan says:

  பலி எடுக்கவும் பலி கொடுக்கவும் மட்டுமே தெரிந்த
  புலிகளின் விளக்கெண்ணை பினாமிகளுக்கு
  பள்ளிக்கூடம் பக்கமே போகாத
  கள்ளக்கடத்தல்காரரும்
  காசு அடிப்பதே தியானமாக இருப்பவனுமே
  தலைவனாக இருக்கமுடியும்

  கடைசியில் கோவணத்துடன்
  முழங்காலில் நின்று மண்டியிட்டு
  பிடரியில் கோடாலிக்கொத்து வாங்கத்தான்
  இந்த விளக்கெண்ணைகள் சரி

  ஒண்டும் விளங்காத விளக்கெண்ணை
  புலி புண்ணாக்குகளுக்கு தெரிந்ததெல்லாம்
  நீயும் ஒரு தமிழனா
  உன் அம்மா தமிழா
  என்று கேட்க மட்டும்தான்

  நாலு விஷயம் விளங்குகிற அளவுக்கு
  அறிவு இருந்தால் புலிவெறி
  இந்த புண்ணாக்குகளுக்கு வந்திருக்காதே
  புலி காட்டின பீலாவில் மயங்கி
  புலி வெறியில் இருக்கும்
  விளக்கெண்ணை மடையர்

  குட்டை நாய்களுக்கும்
  குள்ள தெரிந்த குலைச்சல்
  நீ தமிழனா
  உன்ர அம்மா தமிழா
  நீ தமிழனுக்கு பிறந்தனியா
  என்று குலைக்க மட்டுமே
  தவிர வேறு எதுவும் தெரியாது

  பகுத்தறிவே இல்லாத
  படிப்பறிவே இல்லாத
  அறிவிலீ
  பீலாகக்கூட்டம்தான்
  புலிவாலுகள்

Post a Comment

Protected by WP Anti Spam