ஓட்டப்பந்தயம்: 200 மீட்டர் பிரிவிலும் உசைன் போல்ட் உலக சாதனை

Read Time:1 Minute, 30 Second

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்துவரும் உலக தடகளப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய நட்சத்திரம் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் புதிய உலக சாதனை ஏற்படுத்தியிருந்தார். இருநூறு மீட்டர்களை 19.19 விநாடிகளில் ஓடிக் கடந்துள்ளார் உசைன் போல்ட். கடந்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஏற்படுத்திய 19.30 விநாடிகள் என்ற சாதனையை தானே முறியடித்துள்ளார் அவர். கடந்த ஞாயிறன்று நடந்திருந்த 100 மீட்டர் இறுதிப்போட்டியிலும் பெய்ஜிங்கில் தான் ஏற்படுத்திய உலக சாதனையை தானே முறியடித்து புதிய சாதனை படைத்திருந்தார் அவர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்களையும் உலகப் சாம்பியன் பட்டங்களையும் பெற்ற தடகள வீரர் என்ற பெருமையை சரித்திரத்தில் இதற்கு முன்னர் எவரும் பெற்றதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கோட்டாபய கோரிக்கை
Next post தழிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது