நவம்பர் 27ல் “பிரபாகரன்” திரைப்படம் துவக்கம்!

Read Time:4 Minute, 13 Second

lttepiraba-swimmingதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றிய திரைப்படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். வரும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் மற்றும் ராஜீவ் காந்தி கொலையாளிகளை மையப்படுத்தி ஏற்கனவே ‘சயனைட்’ (குப்பி) எனும் திரைப்படத்தை ரமேஷ் இயக்கியுள்ளார். இடையில் வீரப்பன் பற்றிய படம் இயக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது அந்தப் படத்தை ஒத்திப் போட்டுவிட்டு, பிரபாகரன் பற்றிய படத்தை இயக்கத் தயாராக உள்ளார். பிரபாகரனைப் பற்றிய படத்துக்கான திரைக்கதை தயாராகி விட்டது. ஆனால், பிரபாகரனாக யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது. அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு மிகத் திறமையுள்ள நடிகரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தமக்கு என ‘இமேஜ்’ ஒன்றைக் கொண்டிருக்கும் நடிகர் எவரும் வேண்டாம் என்கிறார் இயக்குநர் ரமேஷ். முன்னதாக இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பார் என கூறப்பட்டது.

நவம்பர் 27-க்குப் பிறகு…

“பிரபாகரன் மரணம் என்பதை நான் இன்னும் நம்பவில்லை. பிரபாகரன் தனது கழுத்தில் சயனைட் அணிந்திருக்கவில்லை. அத்துடன், தனது அடையாள அட்டையையும் வைத்திருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவியலை அறிந்தவர்கள் இவை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறார்கள்..”, என்கிறார் ரமேஷ்.

மேலும் அவர் கூறுகையில், “படப்பிடிப்பை நவம்பர் 27 ஆம் நாளுக்குப் பின்னர் தொடங்க திட்டமிட்டுள்ளேன். காரணம் அந்த நாளில் பிரபாகரன் மக்கள் முன் தோன்றி மாவீரர் தின உரை நிகழ்த்துவார் என்றும் நம்புகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் பிரபாகரன் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளார். இதற்கு முன்பு மூன்று முறை பிரபாகரன் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட போதும், சரியாக இந்த மாவீரர் தினத்தில் மக்கள் தோன்றி உரை நிகழ்த்தியிருக்கிறார் பிரபாகரன்.

நவம்பர் 27ம் நாளில் பிரபாகரன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை எனில் அது, பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக இலங்கை படையினர் கூறுவதை மேலும் உறுதிப்படுத்துவதான தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே அந்த சூழலுக்கேற்ப எனது திரைக்கதையிலும் மாறுதல்களைச் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்கிறார் ரமேஷ்.

இந்தப் படத்தை தானே தயாரிக்கப்போவதாகவும், அதற்கான நிதி உதவியை மலேசியத் தமிழர்கள் இருவர் வழங்குவார்கள் என்றும் ரமேஷ் அறிவித்துள்ளார்.

தமிழர் பகுதிகள் பிரபாகரன் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் வன்னிக்கு ரமேஷை அழைத்திருந்தனர் புலிகள். ஈழப் போர் குறித்த படம் ஒன்றை இயக்கித் தருமாறும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

lttepiraba-swimming

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகதி முகாம் ஊழல் மோசடியில் அமைச்சர் உறவினர்களுக்கு தொடர்பு சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு
Next post காலே டெஸ்ட்-அதிக மெய்டன்கள் வீசி “முரளி” சாதனை