By 26 August 2009 6 Comments

படையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானது என்கிறது அரசாங்கம்

aniuk-british_fan_2.gifஇலங்கை அரசாங்கப் படையினர் தமிழ் மக்களை சித்திரவதை செய்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவப் படைவீரர்கள் போன்று சீருடை அணிந்த நபர்கள் இரண்டு பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கி வரும் செனல் ‐ 4 தொலைக்காட்சி சேவை இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. நிர்வாண நிலையில் கண்கள் கட்டப்பட்ட இரண்டு பேரை இராணுவ சீருடையணிந்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலை செய்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப் பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த காட்சி கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் ஒளிப்பதிவு செய்ததாக குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக மட்டுமே யுத்தம் புரிந்ததாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மட்டுமே படையினர் முன்னெடுத்ததாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. அநேகமான ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையும், வீடியோக் காட்சிகளையும் அரசாங்கத்திற்கு எதிராக வெளியிட்டு வருவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.6 Comments on "படையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானது என்கிறது அரசாங்கம்"

Trackback | Comments RSS Feed

 1. tamilan says:

  இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்

  http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1251225978&archive=&start_from=&ucat=4&

 2. Kumar says:

  Srilankan HRC confirmed with CH4 .
  This is true.
  Kumar

 3. ஒற்றன் says:

  மனிதநேயம் அற்ற மிருகநேயம் கொண்ட ஒரு உலகமாக இன்றைய உலகம் இருக்கிறது என்பதற்கு இந்த ஒளிப்பதிவு நல்ல எடுத்துகாட்டு! தமிழர்கள் எங்கையோ மிகப்பெரிய தவறு செய்ததின் பலாபலன்களோ இவை என எண்ணத்தோன்றுகிறது? சிங்கள பேரினவாதிகளுக்கு பொங்குசனியும் தமிழ் அப்பாவிகளுக்கு மங்குசனியும் நடக்கிறதோ என்னவோ அவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகவே நடந்து கொண்டிருகிறது. அப்பாவி தமிழர்களை தரை,கடல்,வான் என மூன்று வகைப்படைகளையும் கொண்டு அழித்து இந்தியா,சீனா,பாகிஸ்தான்,ரஷியா,ஈரான்,லிபியா,மலேசியா,துருக்கி போன்ற நாடுகளின் நேரடி உதவிகளுடனும் மேலைத்தேய நாடுகள் சிலவற்றின் மறைமுக உதவிகளுடனும் அடக்கி ஒடுக்கிய சிங்கள பேரினவாதிகள் இப்போது அப்பாவி தமிழர்களை வேரோட இல்லாமல் அழித்தொழித்து தமது நீண்டநாள் அபிலாசைகளை பூர்த்தி செய்கின்றான்கள்.

  எங்குபோயி யாரிடம் சொல்வது எமது கொடுமைகளை….அந்த ஆண்டவனே வந்தாலும் எம்மக்களை காப்பாற்ற முடியாதுபோல!!!

 4. Sivaji says:

  This is nothing compare to the balance. Tigers never do like this when the S.L. Army surrenders to them during the fight.

 5. Paarthipan says:

  எழுபது வருடமாக சிங்கள எதிர்ப்பு பேசி அரசியல் செய்த தமிழ் தலைவர்கள் தமிழரை ஏமாற்றினார்கள்.

  கிணத்தடியில் குளித்துக்கொண்டிருந்த என் மகளை உடுத்த உடுப்போடு கடத்தி களத்தில் பலி கொடுத்தனர் பிள்ளைபிடிகார புலிகள்.

  சில மாதங்களின் முனபும் வவுனியாவில் ஒரு இராணுவத்தளபதியின் வீட்டிற்பகுச் சென்ற பாதிரியார் கண்ட காட்சிகள் என்று சில அறுக்கப்பட்ட உடல்களின் படங்களையும் போட்டு பரபரப்பான செய்தியாக்கினார்கள் சில புலிப்பினாமிகள். ஆனால் அவையனைத்தும் இந்தியாவில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட சில உடல்கள் என்பதை அந்த படங்கள் வந்த இந்திய இணையத்தளமொன்றின் இணைப்பையும் இணைத்து புலிப்பினாமிகளின் மோசடிகளை பின்பு சிலர் அம்பலப்படுத்தினார்கள்.

  தொடர்ந்து புலிகளும் புலிப்பினாமிகளும் தமது பரப்புரைகளுக்காக மோசடியாக செய்த பல அம்பலமானாதால், இந்த ஒளிப்பதிவையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க வேண்டியுள்ளது.

  புலிகள் பல காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என்பதை முன்பே ஆதாரத்தோடு வெளி வந்திருந்தன.உதாரணமாக குண்டு வீச்சின் போது சனங்கள் ஓடுவது, பின்பு பதுங்குழியில் பதுங்குவது உட்பட சக போராளிப் பெண்களின் உயிரற்ற உடலையே நிர்வாணமாக்கி இலங்கை இராணுவம் அப்படிச் செய்ததாக பரப்புரையை மேற்கொண்டது வரை. ஆனால் நிர்வாண உடல்களைச் சுற்றி நின்ற புலிகளின் சாதாரண களிசானும் பாட்டா சிலிப்பரும் அவர்கள் யார் என்று காட்டிக் கொடுத்து அவர்களை அம்பலப்படுத்தியது.

  புலிகளின் அடாவடித்தனங்கள் பற்றிய புலிகளால் பாதிக்கப்பட்ட முன்னாள் பல்கலைக்கழக மாணவரொருவரின் நேரடி வாக்குமூலம், பல்கலைக்கழகத்திலேயே அன்று கொடுக்கப்பட்டது.
  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3847:rayakaran11&catid=193:speech-srilanka&Itemid=111

 6. AMMAN says:

  ராஜபக்ஷே இதை எல்லாம் பார்க்கும் போது ஸ்ரீலங்கா ஒரு தீவிரவாத நாடு போலவும் சிங்களர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றே எண்ண தூண்டுகிறது…….. இது உண்மை என்றே நினைக்கிறன் …. இதை அணைத்து நாடுகளும் உணர்ந்து ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பது உலக நாடுகளில் வாழும் அணைத்து மக்களின் உணர்வு! ப கி மூன் என்ன செய்கிறார்?. எந்த உயிரையும் இது போல் கொல்வது மிகவும் வருத்தமான செயல். அதே போல் விடுலை போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்றதையும் நாம் கண்டிக்க வேண்டும், நோக்கம் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் செயல்பாடு தவறாக இருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும். இறுதியல் இன்று துன்பத்தில் சிக்கி இருப்பது அப்பாவி இலகைத்தமிழர்கள் தான்..கலைஞரே !!!பாரும் என் இன மக்கள் ….மிருகங்களால் சுட்டு கொல்லப் படுவதை !!!! இநத காட்சியை உங்கள் வீட்டில் பார்த்து ரசியுங்கள்… இனி துரோகியை “எட்டப்பன்” என்று சொல்வதை விடுத்து “கருணா” என்று சொல்லுங்கள். இந்த சொல் இந்திய கருணாவுக்கும் பொருந்தும் ஈழ கருணாவிற்கும் 100% பொருந்தும் … உலகத்தின் நரகம் ஸ்ரீ லங்க …ராவணனை கொல்ல ராமன் வந்தான் ,ராஜபக்ஷேவெய் கொல்ல யார் வருவார் ? எட்டப்பன் கருணா வருவார்??? ராஜபக்ஷே நீ பதில் சொல்லயே ஆகா வேண்டும்???

Post a Comment

Protected by WP Anti Spam