மீள் பிரேத பரிசோதனையில் மஸ்கெலிய சிறுமிகளின் சடலங்கள்..

Read Time:2 Minute, 56 Second

கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு பின்னர் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளான சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன மீள் பரிசோதனைக்காக சடலங்கள் இன்று 27ம் திகதி கண்டி பொலிஸ் சவச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இந்த சிறுமிகள் இருவரும் பௌத்தலோக மாவத்தையிலுள்ள சாக்கடையில் கடந்த 15ம் திகதி சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த சடலங்களின் பிரேத பரிசோதனைக்கு பின் கடந்த 18ம் திகதி முள்ளுகாமம் தோட்ட மயான்தில் இந்த சிறுமிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டன இந்நிலையில் இவர்களின் மரணம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தனர் இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதவான் சிறுமியின் சடலங்களை ஹட்டன் நீதிமன்றின் ஊடாக தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார் இதற்கேற்ப இன்று 27ம் திகதி நண்பகல் சிறுமிகளின் சடலங்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள் சிறுமிகளின் பெற்றோர்களால் கொழும்பு மலர்சாலை ஒன்றின் ஊழியர்களாலும் அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டன இதன் பின் முள்ளுகாமத் தோட்ட லொறியில் ஏற்றப்பட்ட சடலங்கள் கண்டி பொலிஸ் பிரேதசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன சிறுமிகளின் பெற்றோரும் சடலங்களுடன் கண்டிக்கு சென்றுள்ளனர். கண்டிக்கு கொண்டுசெல்லபஸ்பட்ட சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன இதுதொடர்பில் பிரேத பரிசோதனை நாளை 28ம் திகதி சட்டவைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன இதுதொடர்பில் பிரேத பரிசோதனைகளை நாளை 28ம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாத்தறை கம்புறுபிட்டி கஹபொல பகுதியில் இளம்பெண் காதலரால் குத்திக்கொலை!
Next post வவுனியா அரச அதிகாரிகள் விடுதிகள் மீது இனந்தெரியாதவர்கள் கல்வீச்சு