இலங்கைக் கடற்படைக்கு ரோந்துக் கப்பலைத் தந்தது இந்தியா

Read Time:1 Minute, 58 Second

29-opv200இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது. திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், எஸ்.எல்.என்.எஸ். சயுரலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலை வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையால், இரு நாடுகளின் உறவுகளும் மேம்படும் என்றார். இந்திய கடலோரக் காவல் படை இந்தக் கப்பலை விக்ரஹா என்ற பெயரில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்தது. மும்பையில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. இதன் நீளம் 74.10 மீட்டராகும். அகலம் 11.4 மீட்டர். அதிகபட்சம் 21.5 நாட்ஸ் வேகத்தில் இது போகக் கூடியது. கடல் கண்காணிப்பு ரேடார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இலங்கைப் போரில் இந்தியா பெருமளவில் உதவிகள் செய்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதை நியாயப்படுத்துவது போல பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜுவும் பேசியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக் கடற்படைக்கு நவீன ரோந்துக் கப்பலை இந்தியா வழங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post சுவிசர்லாந்தில் 29.08.09 சனிக்கிழமை நடந்த களியாட்டு பலருக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. மீண்டும் ஒரு ஏமாற்றமா???