By 3 September 2009 3 Comments

புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முயல்கின்றனர் -ஜாலிய விக்கிரமசூரிய!

இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முனைவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஆசிய நிபுணர்கள் மத்தியில் த வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வைத்து உரையாற்றிய அவர், இலங்கையில் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட விதத்தினை விளக்கியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தெளிவான கட்டளையின்கீழ் புலிகளிடமிருந்து பொதுமக்கள் எவ்வித ஊறுமின்றி விடுவிக்கப்பட்டனர். வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து 50ஆயிரம்பேர் கடந்த ஜூன் மாதத்திலிருந்து தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் எதிர்வரும் செப்டம்பரில் மேலும் 50ஆயிரம் பேர் தமது வீடுகளுக்கு திரும்புவார்கள். இலங்கையில் இறுதியான சமாதான அரசியல் தீர்வின் மூலமே ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.3 Comments on "புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முயல்கின்றனர் -ஜாலிய விக்கிரமசூரிய!"

Trackback | Comments RSS Feed

 1. சந்திரன் ராஜா says:

  மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
  வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
  கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
  1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும்.

 2. சந்திரன் ராஜா says:

  பிரபாகரன் சூனியமண்டையில் குடிகொண்டது கொலைவெறியும் ஆயுதத்தால் எதையும்சாதிக்க முடியும் என்ற வக்கிரபுத்தியுமே. மக்கள்தான் வரலாற்றை நிர்ணயிக்கிறார்கள் என்ற உண்மையை பதினாறு வயதில் பஸ்கொழுத்தி பதிஏழுவயதில் கொலைசெய்யப் புறப்பட்ட இந்த சூனியமண்டைக்கு புரியமறுத்ததில் ஆச்சரியமில்லை. அறிவு பூர்வமாகச் சிந்திப்பதற்கோ அரசியல்ரீதியாக சிந்திப்பதற்கோ பிரபாகரனுக்கு அறிவு இருக்கவில்லை. அதனாலேயே நாட்டிலிருந்த புத்திஜீவிகளை போட்டுத் தள்ளுவதிலும் அல்லது மிரட்டி நாட்டைவிட்டு வெளியேற்றுவதிலுமே குறியாகவிருந்தார். குறைகளைச் சுட்டிக் காட்டியவர்களும் துரோகிகளாக்கப்பட்டுப் போட்டுத் தள்ளப்பட்டார்கள். ஒரு தனிமனிதனின் திறமையால் ஆயுதமகிமையால் ஒரு இனமோ மதமோ அல்லது ஒரு நாடோ விடுதலையடை முடியும் என நினைப்பவர்கள் புலிகளைப் பற்றி பேசலாம். மானம் உள்ள தமிழன். தமிழ்மொழி எங்கள் மூச்சு. எள்ளாளன் திராவிடன் கடைசிச்சொட்டு ரத்தம். கடைசித்தமிழன் இருக்கும் வரை. கிடாரம்வென்ற தமிழன். கிடாரம் தூக்கிய தமிழன் இப்படியான வார்த்தைகள் “ரெடிமெட்” ஆகவே இருக்கிறது. அதை தூக்கிக்கொண்டு கிளம்பவேண்டியது தான். இல்லையேல் மதஇன ஒற்றுமையில் தான் யுத்தம் இல்லாதநாட்டை காணமுடியும்m என நினைப்பவர்கள் புலிகதையும் மயானக்கதைகளையும் எங்கோ ஓர்மூலையில் ஆழகுழிதோண்டி புதைத்துவிட்டு ஆக்கப்பணியில் ஈடுபடவேண்டும்.

 3. arya says:

  சந்திரன் ராஜா , You are correct, but taml diaspora in europe and north america they can`t understand real, they are still in dream, they speak still Tamil Eelam, but i don`t know where is it ???? may be in Toronto.

Post a Comment

Protected by WP Anti Spam