உலகப் புலனாய்வினர் சுற்றுலாப் பயணிகள்போல் பிரவேசித்துள்ளனர் -திவயின!
உலகப் புலனாய்வு அமைப்புக்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக திவயின பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்ற நபரொருவர் இப்புலனாய்வு அதிகாரிகளைச் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னரும், ரஷ்ய ஆயுத விநியோகஸ்தர்கள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று இலங்கைக்குள் பிரவேசித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. புலிகள் அழிக்கப்பட்டமை மற்றும் இடம்பெயர் முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளே இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகவும், இலங்கைக்கெதிரான தகவல்களைத் திரட்டும் நோக்கில் இவர்கள் ஊடுருவியுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.