முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம்
முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றையதினம் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.அங்கு விஜயம் செய்த ஜெனரல் சரத் பொன்சேகாவை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முல்லைத்தீவு பிரதேச படைகளின் தளபதி மேஜர்ஜெனரல் நந்தன உடவத்த ஆகியோர் வரவேற்றதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் 59வது படைப்பிரிவின் சிரேஷ்ட படை அதிகாரிகளுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் யுத்தத்தின் பின்னரான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.