பொலிஸாரின் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று மாளிகாவத்தைப் பகுதியில் ஆர்ப்பாட்டம்
கொழும்பின் புறநகர் பகுதியான மாளிகாவத்தைப்பகுதியில் பல முஸ்லிம்களை பொலிஸார் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றதாக கூறி அப்பகுதி முஸ்லிம் மக்கள் நேற்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆண்களும் பெண்களுமாக பதாகைகளை ஏந்தியவாறு பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் மேலும் பல முஸ்லிம்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டும் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அந்தப்பகுதியில் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற குற்றச்செயல்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளையே தாம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.