வடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

Read Time:2 Minute, 4 Second

புலிகளுடனான யுத்தத்தின் போது வடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக அங்கு கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளன. கிளிநொச்சி, ஆனையிறவு, முல்லைத்தீவு மற்றும் புதுமாத்தளன் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது உயிரிழந்த படையினரின் நினைவாக அங்கு நினைவுத் தூபிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவுத்தூபிகள் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவால் நேற்றுத் திறந்து வைக்கப்படவிருந்தன. சரத்பொன்சேகா வடபகுதிக்கு நேரில் சென்று தூபிகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்க இருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இத்திறப்பு விழாக்கள் கடைசி நேரத்தில் மறுதிகதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒத்திவைப்புக்கான காரணம் இன்னமும் வெளியிடப்படவில்லை. பகிரங்க பிரசாரம் கிடைக்கக்கூடிய எந்த நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளைப் முக்கியப்படுத்த வேண்டாம் என்று கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்றும் இதனடிப்படையிலேயே இந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றும் படை வட்டராங்களிலிருந்து தெரிய வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சனல்4 வீடியோ திட்டமிட்ட வகையில் புனையப்பட்டதாகும் -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய!
Next post 500தமிழ் யாழ். இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைக்க தீர்மானம்..!