படகில் வந்த 32 தமிழ் அகதிகளை பிடித்த ஆஸ்திரேலியா

Read Time:1 Minute, 16 Second

படகு மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்த 32 இலங்கைத் தமிழர்களை தடுத்துப் பிடித்த ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர். படகில் உள்ள 32 பேருமே ஆண்கள் ஆவர். இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவை நோக்கி புகலிடம் கோரி வந்த 35வது படகு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானம் இந்தப் படகை கண்டுபிடித்து கடற்படைக்கு உத்தரவிட்டு தடுத்து கிறிஸ்துமஸ் தீவுக்கு திருப்பி விட்டது. கரைக்குக் கொண்டு வரப்பட்ட அவர்களை ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் அங்குள்ள முகாமுக்கு கொண்டு சென்றனர். அனைவருக்கும் சுகாதார சோதனைகளும் நடத்தப்பட்டன. இவர்களையும் சேர்த்து தற்போது கிறிஸ்துமஸ் தீவில் உள்ள முகாமில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1090 ஆக உயர்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “படகில் வந்த 32 தமிழ் அகதிகளை பிடித்த ஆஸ்திரேலியா

  1. வேலுப்பிள்ளை (SJV)செல்வநாயகம் மலேசியாவில் பிறந்த மலேசியபிரஜை. பின்னர் இலங்கையில் குடியேறியவர்.
    காங்கேசர் (GG)பொன்னம்பலம் அல்வாயில் பிறந்தாலும் 1956ஆண்டு மலேசியாவுக்கு குடிபெயர்ந்து அங்கு சட்ட தொழில் புரிந்து ரப்பர் தோட்டங்களை வாங்கி மலேசிய பிரஜை ஆனவர்.
    சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த திருவேங்கடம் என்ற இந்திய மலையாளித் தமிழனின் பேரன்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
    நாங்கள் எல்லாரும் பெரும்பாலும் நாடோடிகள் தான். அந்த நாடோடிகளின் திரவியம் தேடும் சிந்தனையின் விளைவே எங்களுக்குள் இருக்க கூடிய அடிமைப் புத்தி.
    பூர்வீகம் பூர்வீகமாக ஒரே இடத்தில் இருந்து வாழ்ந்தவர்கள் பிரச்சனைகளை விட்டு தப்பி ஓடுவதை விட்டு பிரச்சனைகளை தீர்க்க சிந்திப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

Leave a Reply

Previous post வெளிநாடு ஒன்றில் தாம் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவிப்பு
Next post ரிஹர்சல் சத்தத்தால் எரிச்சல் – மடோனா மீது பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு