திருகோணமலை இடைதங்கல் முகாமில் 65விடுதலைப்புலி உறுப்பினர்கள்..

Read Time:2 Minute, 0 Second

திருகோணமலை இடைதங்கல் முகாமில் பொதுமக்களுடன் தங்கியிருந்த 65 புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான தகவல்களை திரட்டும்போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தின் பதில்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார் புலி உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்ட இவர்கள் வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக தற்காலிக மற்றும் இடைதங்கல் முகாம்களிலுள்ள பொதுமக்களின் விபரங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் மீண்டும் திரட்டப்பட்ட வருகின்றன இந்நிலையில் கடந்த 1மாதகாலமாக திருகோணமலை இடைதங்கல் முகாமில் தங்கியுள்ள பொதுமக்களின் விபரங்கள் தொடர்பில் விபரங்களை இராணுவத்தினர் ஆராய்ந்தபோதே மேற்படி புலி உறுப்பினர்கள் 65பேரும் அடையாளம் காணப்பட்டனர் இவர்கள் அனைவரும் தற்போது வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும்நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரத்பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் சந்தித்துள்ளனர்
Next post புலிகளின் கடற்போக்குவரத்து இன்னும் இடம்பெறுகிறது -ரோஹான் குணரட்ண