பலத்த கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள்

Read Time:3 Minute, 18 Second

Tamilnadu.1.jpgகடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு பலமாக இருந்தபோதும் அதனையும் பொருட்படுத்தாமல் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர். மன்னாரிலிருந்து நேற்று (03.06.2006) மேலும் 207 பேர் தமிழகம் சென்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, பாலையூற்று ஆகிய பகுதிகளிலிருந்தே இவர்கள் இடம்பெயர்ந்து சென்றுள்னர். தமிழ்நாட்டின் தனுஷகோடி, இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை சென்றடைந்திருக்கும் இந் 57 குடும்பங்களை சேர்ந்த 207 பேரையும் பொலிஸார் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுவரை தமிழகம் சென்றுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தொகை 2 ஆயிரத்து 772 என தெரிவிக்கப்படுகிறது.

அகதிகளாக வருபவர்களிடம் கடவுச்சீட்டுக்கள் இருப்பதாகவும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் திட்டத்துடன் இவர்களில் சிலர் வந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடுமையான கடல் கொந்தளிப்பதால் மீன்பிடி தொழிலாளர்கள் கூட கடலுக்கு செல்வதில்லை ஆனால் அகதிகள் கடற்கொந்தளிப்பு குறித்து கவலைப்படாமல் சிறிய படகுகளில் தமிழகம் சென்றுகொண்டிருக்கின்றனர். திருகோணமலையிலிருந்து இந்தியா செல்வதற்காக வந்த குடும்பங்கள் மன்னார் பேசாலை சென்மேரிஸ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 50 பேர் வியாழக்கிழமை அங்கிருந்து வெளியேறியுள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் நேற்றும் மேலும் 107 பேர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டனர் இவர்கள் தமிழ்நாட்டுக்கு செல்லும் நோக்கத்துடனேயே வெளியேறியிருக்க வேண்டும் என இவர்களை மன்னாரில் தங்கவைத்து அடிப்படை தேவைகளை கவனித்து வந்த அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பேசாலை சென்மேரிஸ் பாடசாலையில் 117 அகதிகள் எஞ்சியுள்ளனர். ஏற்கனவே பயனம் செய்த படகு சிலாபம் கடலில் மூழ்கிய வேளையில் சிங்கள மீனவர்களால் காப்பாற்றப்பட்ட 18 பேரும் பேசாலை சென்மேரிஸ் பாடசாலையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் புனித லோறன்ஸ் மகாவித்தியாலயத்திலும் 50 அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகம் செல்வதிலேயே குறியாக உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நைஜீரியா நாட்டில் எண்ணைக்கம்பெனி ஊழியர்கள் 8 பேர் விடுதலை 2 நாட்களுக்கு பிறகு கடத்தல்காரர்கள் விடுவித்தனர்
Next post அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் குடாநாட்டு விஜயம்