கொழும்பு முஸ்லிம்கள் சார்பாக ஐ.தே.கட்சியில் எவரும் தெரிவாகவில்லை -முன்னாள் அமைச்சர் அஸ்வர்

Read Time:2 Minute, 39 Second

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முதலாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு நகர் வாழ் முஸ்;லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்படவில்லை ஐ.தே.கட்சிக்கு வாக்களித்தால் இக்கதிதான் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு நேரும்  என்று பொதுத்தேர்தலின்போது நாம் எச்சரித்தோம் அதனை அவர்கள் பொருட்படுத்த தவறி விட்டனர் இப்போது அவர்கள் விதித்த வினையை அனுபவிக்கின்றனர். ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இப்பொழுதாவது கைவிட்டு முஸ்லிம்கள் அனைவரும் இத்தேசம் உருவாக்கிய அப்பழுக்கற்ற மாபெரும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவோடு சேருமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் கொழும்பு சென் அந்தனீஸ் வீதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிவிழாக் கூட்டத்தில் பேசுகையில் முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் மேற்கண்டவாறு கேட்டுக் கொண்டார் உள்நாட்டு விவகாரங்களிலும் அரபுலக விவகாரங்களிலும் ரணில் விக்கிரமசிங்க எப்பொழுதும் முஸ்லிம் விரோத கொள்கையை கடைபிடித்து வந்துள்ளார் என்பதை உலகம் அறியும் தேசியப்பட்டியலில் இருந்தோ வேறுவித வெற்றிடங்களை நிரப்பும் காய் நகர்த்தலிலோ கொழும்பு முஸ்லிம்களை அவர் மேலும் புறக்கணிப்பார் என்பது திண்ணம் ஆகவேகொழும்புமாவட்ட முஸ்லிம்கள் தமது எதிர்கால நலனை கருத்திற்கொண்டு இந்த நாட்டை மேலும் 7வருடங்களுக்கு ஆட்சி புரியவிரும்பும் முஸ்லிம்களின் உற்ற நண்பனுமான  ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுடன் சேர்ந்து ஒத்துழைக்கமாறு முஸ்லிம்கள் நலனின் அக்கறைக்கொண்டவன் என்ற முறையில் அனைத்து முஸ்லிம்களையும் அன்போடு வேண்டுகிறேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கு உரியமுறையில் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் -ஜனாதிபதி தெரிவிப்பு
Next post நோர்வே ஒஸ்லோவில் இலங்கை தூதரகத்தை தாக்கிய 8பேர் கைது