ஐக்கிய தேசிய கட்சி நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள்..

Read Time:2 Minute, 11 Second

ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறிப்பாக இரண்டு புதிய பிரதித்தலைவர் பதவிகள் உருவாக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கட்சியின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் பதவிகளில் மாற்றங்கள் எற்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸாவின் புதல்வர் சஜித் பிரேமதாஸவிற்கு பிரதித்தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த பதவி நியமனங்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்  இதேவேளை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் எனவும் இளைஞர் ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர் அமர்வுகளுக்கு முன்னதாக செயற்குழுக் கூட்டமும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எதிர்கட்சியின் பிரதம கொறடாவாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.ரி.என் தொலைக்காட்சி கட்டிடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை..
Next post படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்திய நால்வர் கைது