எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரதும் உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்-ரணில்

Read Time:1 Minute, 49 Second

அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்hர். ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. சபாநாயகர் தெரிவுக்கு பின்னர் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்தமுறை சபாநாயகரை இரவு சாப்பாட்டுக்குப் பின்னரே தெரிவுசெய்தோம். 1989ம் ஆண்டு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட்டதுபோல இம்முறையும் செய்தோம். எனக்கும் புதிய சபாநாயகருக்கும் இடையில் அரசியல் ரீதியில் கருத்துமோதல்கள் இருந்தபோதிலும் தனிப்பட்ட ரீதியில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவர் இந்த இடத்தில் ஒருகட்சியின் பிரதிநிதியாக அமரவில்லை. முழு நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாகவே அமர்ந்திருக்கின்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு
Next post ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு தண்டனை வழங்கப்படாத நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்