13 வயது சிறுமியை திருமணம் செய்த நைஜீரிய செனட்டருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Read Time:2 Minute, 10 Second

நைஜீரியாவில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட செனட்டர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த செனட்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நைஜீரிய பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 49 வயதான அஹமட் சானி யர்மியா என்ற செனட்டரே இவ்வாறு 13 வயது சிறுமி ஒருவரை அண்மையில் தலைநகர் அபுஜாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியையே குறித்த செனட்டர் கரம் பற்றியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண் செனட்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த திருமணம் தொடர்பில் நைஜீரிய மனித உரிமை அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, இந்த திருமண வைபவம் குறித்து குறித்த செனட்டர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

குறித்த எகிப்திய சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக அஹமட் சானி யர்மியா என்ற செனட்டர் சிறுமியின் குடும்பத்தாருக்கு வரதட்சணை வழங்கியுள்ளதாக பெண் செனட்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2003ம் ஆண்டு சிறுவர் உரிமைகளை மீறும் வகையில் சானி செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டில் குறித்த அதே செனட்டர் 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்திருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து இந்திய மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் ‐ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Next post 75 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது