புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

Read Time:1 Minute, 36 Second

புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அடைக்கலம் மறுக்கப்பட்டதனால் ஆத்திரமுற்ற குறித்த அகதிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இன்னும் பல அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கப்படலாம் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். அடைக்கலம் மறுக்கப்பட்ட மக்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரா என்ற சிறுபான்மை இனத்தவர்களே அதிகளவில் ஆர்பாட்டங்களில் நடத்தி வருவதாகவும்இ அதிகளவில் இவர்களுக்கே அடைக்கலம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நிலைமைகள் சுமூகமடைந்து வருவதனால் அதிகளவானோரது புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயங்கரவாதத்தின் அனைத்து பரிமாணங்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் – தெற்காசிய வலய நாட்டுத் தலைவர்கள்..!
Next post வடக்கின் மீள்க்குடியேற்றம் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் -இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே காந்தா..!