வடக்கின் மீள்க்குடியேற்றம் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் -இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே காந்தா..!

Read Time:1 Minute, 41 Second

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மற்றும் காங்சேன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவாக அபிவிருத்தி செய்யும் பணிகளுக்கு உதவி வழங்க இந்திய இணங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே காந்தா மற்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன ஆகியோர் இடையில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற சந்திப்பின் போது இந்திய உயர்ஸ்தானிகர் இதனை அறிவித்துள்ளார். புதிய பிரதமர் டி.எம்.ஜயரத்னவுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். இலங்கை‐ இந்தியா இடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கின் மீள்க்குடியேற்றம் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் எனவும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சமூக மற்றும் கலாசார தொடர்புகளை வரிவுப்படுத்த ஒத்துழைப்புகள் அளிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார். 2600 வது புத்தர் ஜயந்தி முன்னிட்டு இந்தியாவில் பௌத்த மாநாடு ஒன்றை நடத்தும் யோசனையையும் இந்திய உயர்ஸ்தானிகர முன்வைத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!
Next post அமெரிக்காவில் விபரீதம்- 7வது மாடியை உடைத்து வெளியே வந்து தொங்கிய கார்