நாடெங்கிலும் நேற்றிரவு பரவிய வதந்தியால் மக்கள் பீதி

Read Time:2 Minute, 3 Second

ஐகயடக்கதொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புகளை பெற்று அவர்களுடன் உரையாடும்போது மூளை பாதிப்படைந்து இருப்பதாக நாடுமுழுவதிலும் வதந்தி பரவியது இதனால் மக்கள் பெரும்பீதியுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் கையடக்க தொலைபேசிகளுக்கு 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587 எனும் இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புகளை ஏற்கவேண்டாம் இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கம் இந்த அழைப்புகளை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர்ஒலி அதிர்வு காரணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள்ளாகினர் என்றும் அந்த அழைப்புகளை ஏற்றதால் 27பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கையடக்கதொலைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது இக்குறுந்தகவலில் இதனை டயலொக் நியூஸ்சேவை உறுதி செய்ததாகவும் இதனை நண்பரர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும் மேலும் கூறப்பட்டிருந்தது இத்தகவல்களால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரிடமும் விசாரித்து தமது தொலைபேசிகளையும் நிறுத்திவைத்துள்ளனர் இதுதொடர்பாக டயலொக் நிறுவனம் எந்தசெய்திகளையோ குறுந்தகவல்களையோ வெளியிடவில்லை என்றும் இது மக்களை பீதியடைய சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியே என்றும் டயலொக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா
Next post பருத்தித்துறைக்கும் கொழும்புக்குமான நேரடி பஸ்சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாற்றம்