வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

Read Time:2 Minute, 4 Second

இலங்கைக்கு ஏற்றவகையில் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாம் பின்பற்றிய சில வெளியுறவுக் கொள்கைகள் புலிகளின் ஒரு சில செயற்பாடுகளுக்கு சாதகமானதாக அமைந்திருந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வளங்ளைத் திரட்டி வேறும்வழிகளில் அரசாங்கமொன்றை அமைக்கும் முனைப்பில் புலி ஆதரவாளர்கள் ஈடுபட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சில ஐரோப்பிய நாடுகளும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு புறம்பான வகையில் சில வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டு வருகின்றன. எமது நிலைமைகளை உலகிற்கு சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். இலங்கை தொடர்பில் உலக நாடுகளின் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு நிதி உதவிகள் மிகவும் இன்றியமையாதவை. இலங்கை தொடர்பான நம்பிக்கையையும் நன்மதிப்பையும் ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். சில தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆயுதங்களுடன் கைது
Next post இனப்படுகொலையை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை -சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்