இறந்தோரின் நினைவுத்தினத்தை சீர்கலைக்கும் துண்டுப்பிரசுரம்.. வவுனியாவில் விநியோகிக்கப்பட்டுள்ளது

Read Time:2 Minute, 20 Second

வன்னியில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து உயிரிழந்த மக்களை நினைவுக்கூறும் நிகழ்வை தமிழ்தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளது இந்த நினைவுத்தின நிகழ்வை சீர்குலைக்கம் வகையில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று 17ம் திகதி புலிகள் அழிக்கப்பட்டு நாடு சுபீட்சம் பெற்ற நாள் எனவே இந்த தினத்தை தமிழ் மக்கள் இறந்த தினமாக கூறி ஒருசில தீயசக்திகள் துக்கம் அனுஷ்டிப்பு வாரம் எனப் பிரகடனப்படுத்தி வியாபார நிலையங்களை மூடி ஹர்தால்களையும் ஊர்வலங்களையும் அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. தமிழ் மக்கள் உயிரிழந்ததை நிறைவு கூறுவதென்றால் வேறு தினத்தில் அதனை அனுஷ்டிக்க முடியும் ஆனால் தமிழ்மக்களை பல வருடங்களாக துன்புறுத்திய புலிகள் கொல்லப்பட்ட தினத்தை  அனுஷ்டிக்கும் நோக்கத்துடனேயே அவர்கள் செயல்படுகிறார்கள் இவ்விடுதலையின் பின் எமது மக்கள் தற்போது மீள் குடியமர்த்தப்பட்டு வருவதோடு அமைதியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் புதுவாழ்க்கையை ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர் எனவே இந்தச் சதி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி எமது தமிழ் மக்களை மேலும் கஷ்டப்படுத்த முயற்சித்தால் நீங்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் என கவலையுடன் அறியத் தருகிறோம் என்றும் அத்துண்டுப்பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீரற்ற காலநிலையால் விமானசேவைகள் இடைநிறுத்தம்
Next post மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜேனட்டுக்கு புதுக்காதலர்