100 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் சுதந்திர போராட்ட தியாகி..!

Read Time:1 Minute, 48 Second

நம் மத்தியில் சில முதியோரிடம் கல்வி மற்றிக் கேட்டால், “மழைக்குக் கூட பள்ளிப் பக்கம் ஒதுங்கியதில்லை…” என்று ஏதோ சாதனை படைத்தது போல் பெருமை பேசுவார்கள். நாற்பது, ஐம்பது, அறுபது வயதென்றாலே, இதற்கு மேலும் படித்து என்னதான் சாதிக்கப் போகின்றோம் என்று அலுத்துக் கொள்பவர்களும் இல்லாமலில்லை. இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கின்றார் ஒருவர்.  அவர்தான் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய போலாராம் தாஸ் என்ற தியாகி. இவர் தனது 100 ஆவது பிறந்த நாளை, வெகு விமரிசையாகக் கடந்த வாரம் கொண்டாடினார். ஆனால் தற்போது இவர் இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாட்டி பல்கலைக்கழகத்தில் PhD கற்பதற்காக இணைந்துள்ளார் என்றால் ஆச்சரியமாக இல்லையா? இந்திய பல்கலைக் கழகமொன்றில் கல்வி கற்கும் அதிக வயதான நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர், 100 ஆண்டுகளில் பல சமூக, அரசியல், மத சார் சேவைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தாஸுக்குப் பத்துப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ஒருவரே இவருக்குக் கற்பதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளார். இவரின் மனைவி 1988 ஆம் ஆண்டு காலமாகி விட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எவரும் கையாளக் கூடிய ‘ ரோபோடிக்’ மென்பொருள்..!
Next post இமயமலையில் பாபா குகையில் ரஜினி..!