தனது பெயரில் மோசடி ரசிகர்கள் ஏமாற வேண்டாம்-அசின்..!

Read Time:1 Minute, 47 Second

இணைய தளத்தில் தனது பெயரில் மோசடி நடப்பதாகவும், அதை பார்த்து ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்றும் இரண்டாவது தடவையாக அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இணைய தளத்தில் அசின் பெயரில் போலி வெப்சைட்கள் இயங்குகின்றன. ஆர்குட்டிலும் அசின் பெயர் உள்ளது. அசின் பேசுவதுபோல் அவற்றில் தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளது. அவரது படங்களும் போடப்பட்டு உள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அசின் என்று நம்பி பதில்களை அனுப்பி வருகின்றனர். இதுபற்றி அசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவர் அதிர்ச்சியானார். அவை போலியானவை என்று தெளிவு படுத்தினார். ஆனாலும் சில ரசிகர்கள் தொடர்ந்து ஏமாறியவண்ணம் உள்ளனர். அவர்களுக்கு அறிவுரை வழங்கி அசின் மீண்டும் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:- இணையதள வெப்சைட்களில் நான் இல்லை. டுவிட்டர், ஆர்குட், பேஷ்புக் போன்றவற்றிலும் நான் கிடையாது. எனது பெயரில் போலியாக சிலர் அவற்றை நடத்துவதாக என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. என்னுடைய நண்பர்களும், ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி எனக்கு தகவல்கள், கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள். நான் அவற்றை பார்ப்பதே இல்லை. தயவு செய்து ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு எனக்கு அவசரமில்லை-திரிஷா..!
Next post அரைகுறை ஆடையுடன் ஸ்ரேயா-நசுக்கிய ரசிகர்கள்..!