போலி ஆவணங்கள் தயாரித்து பெண்களை சவுதிக்கு அனுப்ப முயன்ற முகவர் கைது

Read Time:1 Minute, 24 Second

arrest-002
பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவென போலி ஆவணங்களை தயாரித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய ஊழியர் ஒருவர் மருதானையில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விமான நிலைய பிரிவு அதிகாரிகள் குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்து கொண்டனர். சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் செல்லவென தயார் நிலையில் இருந்த இரு பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களிடம் காணப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப உதவிய முகவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முயற்சித்த மூன்று பெண்கள் நேற்று (21) கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறிதரன் எம்பிக்கு சோதனை மேல் சோதனை!
Next post ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட முழு நிர்வாண படப்பிடிப்பு (18+ படங்கள்)