இன்றைய ராசிபலன்கள்:24.01.2013

Read Time:9 Minute, 0 Second

Raasipalan-003
மேஷம்
பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கோபம் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

ரிஷபம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப்பழுது நீங்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவீர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளை ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

கடகம்
உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்துப் போகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

சிம்மம்
இன்றைய தினம் எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

கன்னி
இன்றைய தினம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

துலாம்
புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலரின் குறைகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

தனுசு
இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தலைவலி, வாயுக் கோளாறு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

மகரம்
புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

கும்பம்
இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

மீனம்
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலும் புலிகள் கைதாகவூள்ளதாக இராணுவம் கூறுவதை நிராகரிக்கிறார் த.வி.கூ செயலர்
Next post இலங்கையூடன் உறவூகளை வலுப்படுத்த அமெரிக்கா விருப்பம்