அமெரிக்காவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 7 வயது சிறுவன்

Read Time:1 Minute, 55 Second

usa-002
அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி பயன்படுத்தும் கலாசாரம் சர்வ சாதாரணமாகி விட்டது. சமீபத்தில் கனெக்டிக்ட் மாகாணம் நியூ டவுனில் ஒரு தொடக்க பள்ளியில் புகுந்த மர்ம நபர் சுட்டதில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து மேலும், அதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற குரல் அங்கு வலுத்துள்ளது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் பள்ளிக்கு சிறுவர்கள் கூட துப்பாக்கி எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எட்ராய்ட் பகுதியில் இங்ஸ்டர் என்ற இடத்தில் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் சிறுவன் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருவதாக முதல்வருக்கு டெலிபோன் மூலம் தகவல் கிடைத்தது. இதனால் பரபரப்பு அடைந்த ஆசிரியர்கள் வகுப்பறை வாசலில் நின்று மாணவர்களின் பேக்கை சோதனை செய்தனர். அப்போது 3ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி எடுத்து வந்தது தெரிய வந்தது. எனவே அவன் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு துப்பாக்கி பறிமுதல் செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸ், டேவோஸ் கூட்டத்தில் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்
Next post வட பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன -யாழ் ஆயர்