சுவிஸ், டேவோஸ் கூட்டத்தில் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்

Read Time:2 Minute, 19 Second

swiss_nak_protest
சுவிஸ்ட்லாந்தில் உள்ள உச்சிப்பனிச் சறுக்கின் விளையாட்டு தலமான டேவோஸில் 45 நாடுகளில் உள்ள உலகத் தலைவர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்ட பொருளாதார மறுமலர்ச்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் முன்னேற்ற பாதை, அரசியல் சம்பந்தமான விடயங்கள் மற்றும் பொருளாதார நிலை குறித்து பேசப்பட்டன. ஐரோப்பிய நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை குறித்து முக்கியமாக இக்கூட்டத்தில் கருத்துகள் பகிர்க்கப்பட்டன. டேவோஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா்களுக்கு தங்கும் இடம், உண்ணும் வசதி மற்றும் பிரமாண்டமான கொக்டைல் பார்ட்டிகள் தந்து உபசரிக்கப்பட்டது. இவ்வாறு இக்கூட்டம் சிறப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், டேவோஸ் கூட்டத்தின் இடையே இளம்பெண்கள் திடீரென அவர்களது மேலாடையை கழற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வெகுநேர போரட்டத்திற்கு பிறகு பொலிசார் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலாளிகள் இப்பெண்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இப் பெண்களில், எதிர்கால உரிமை மறுக்கப்படுவதாகவும், பெண்கள் அடிமைப்படுத்தபடுவதாகவும், எதிர்கால சுதந்திரம் தேவை என்ற வாக்கியங்களை தங்களின் உடம்பில் எழுதி போரட்டத்தின் ஈடுபட்டனர்.

இதனால் டேவோஸ் மாநாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கு முன்னர் 2010 ம் ஆண்டு பெண்கள் சுதந்திரம் வேண்டி ரஷ்ய, உக்கொரைன், இலண்டன் ஆகிய நாடுகளிலும் இது போன்று மேலாடையின்றி போரட்டங்களை நடத்தி உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

swiss_nak_protest

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post அமெரிக்காவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 7 வயது சிறுவன்