இன்றைய ராசிபலன்கள்:29.01.2013

Read Time:8 Minute, 55 Second

Raasipalan-003
மேஷம்
இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

ரிஷபம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப்பற்றாகுறை விலகும். மனதிற்குப்பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்து வீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

மிதுனம்
நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப் படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

கடகம்
இன்றையதினம் சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படை வீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்

சிம்மம்
இன்றையதினம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படப்பாருங்கள். தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரியை கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

கன்னி
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

துலாம்
துடிப்புடன் காணப்படுவீர்கள். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் – மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாயாரின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். மாணவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரெவுன்

தனுசு
பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தருவதாக அமையும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

மகரம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

கும்பம்
ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். கன்னிப்பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பார்கள். அரசாங்க வேலைகளிலிருந்து வந்த தடைகள் நீங்கும். விருந்தினர்களின் வருகையுண்டு. அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

மீனம்
மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். கன்னிப்பெண்களுக்கு காதல் கைகூடும். வயிற்றுவலி, கனவுத்தொல்லை நீங்கும். மாணவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளின் தோழியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய காமத் தந்தை
Next post யாழில் 15வயது சிறுமி கடத்தல்