புலிகள் அமைப்பினரால் அமைக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதை புனரமைப்பு
Read Time:57 Second
புலிகள் அமைப்பினரால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையை புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த ஓடுபாதையை 1500 மீற்றர் வரை விரிவாக்குவதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இந்த விரிவாக்கல் பணிகளில் இதுவரை 75 வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனரக போக்குவரத்து விமானங்கள் தரையிறங்கும் வகையில் இந்த ஓடுபாதை விரிவாக்கப்பட்டு வருவதுடன் விரிவாக்கற் பணிகள் முடிவடைந்ததும் விரைவில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவூள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating